தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த கௌசல்யா 30 வயதிற்கு பிறகு தனது திருமணம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழில் கௌசல்யா அறிமுகமானார். தொடர்ந்து, கார்த்தி, விஜய், விஜயகாந்த், பிரபு தேவா என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். இவரின் யதார்த்தமான நடிப்பால் கோலிவுட்டின் முக்கிய படங்களில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, 90களின் கோலிவுட்டின் எழுதப்படாத விதியில் இவர் என்ன தப்புவாரா?

நாயகியாக நடிக்க வாய்ப்புகள் குறைந்தது. வெள்ளித்திரையை விடுத்து சின்னத்திரைக்குள் கால் பதித்தார் கௌசல்யா. பல சீரியல்களில் நடித்தார். இருந்தும், அவருக்கு சின்னத்திரையும் செட்டாகவில்லை. பிறகு, கோலிவுட்டிற்கே திரும்பியவர் அம்மா, அண்ணி வேடத்தை ஒப்புக்கொண்டார். தற்போது, 38 வயதாகும் கௌசல்யா பெங்களூரை சேர்ந்தவர். இவருடன் சம காலத்தில் நடித்து வந்த அனைத்து நடிகைகளும் திருமண வாழ்க்கையில் நுழைந்து விட்டனர்.

ஆனால், கௌசல்யா யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சரி, ஒரு வேளை காதலில் விழுந்து விட்டாரோ என நீங்கள் யோசித்தால், அட இந்த அம்மணிக்கு இதுவரை அந்த புயலே அடிக்கவில்லையாம். அதுபோல, திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு எந்த காரணம் கூட கிடையாதாம். அட என்னப்பா இப்படினு நீங்க நினைக்கிறது தெரியுது.

இந்நிலையில் தான், மலையாள படப்பிடிப்பில் கலந்து கொள்ள கேரளா சென்ற கௌசல்யா விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்து இருக்கிறார். பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். என் மனதுக்கு பிடித்தவரை விரைவில் மணப்பேன் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இதற்கு தான் இதுவரை காத்து இருந்தோம் என்பது போல அவரிடம் இந்த வார்த்தைகளை கேட்ட நொடி முதல் பெற்றோர்கள் வலை வீசி அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் இறங்கி இருக்கின்றனர். இதனை தொடர்ந்து, கௌசல்யாவின் திருமணம் இந்த வருட இறுதிக்குள் நடக்கலாம் என திரை வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட தொடங்கி இருக்கிறது.