முதல் படம் ரிலீஸாவதற்கு முன்பே மூக்கு பெருத்த நடிகருக்கும், அரசியல் வாரிசுக்கு ஜோடியாகவும் அடுத்தடுத்து கமிட்டானார். இரண்டு படங்களுமே இப்போது ரிலீஸுக்குத் தயார் நிலையில் இருக்கின்றன.
ஒரு படத்தில் நகரத்துப் பெண்ணாகவும், இன்னொரு படத்தில் கிராமத்துப் பெண்ணாகவும் வித்தியாசம் காட்டியுள்ளாராம் நடிகை.அரசியல் வாரிசுக்கு ஜோடியாக நடித்த படத்தில், தைரியமான பெண்ணாக நடித்துள்ளார் இவர்.
ஆனால், நிஜத்தில் பயந்தாங்கொளியாம். தனக்கு என்ன பிரச்னை என்றாலும், முதலில் அரசியல் வாரிசிடம் தான் சொல்கிறாராம். படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான் என்பதால் அரசியல் வாரிசிடம் சொல்லியிருக்கலாம் என நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், ஷூட்டிங் முடிந்தபிறகும் அவரிடம்தான் ஆறுதல் தேடுகிறாராம். அந்த அளவுக்கு நடிகையை அக்கறையாகக் கவனித்துக் கொள்கிறார் அரசியல் வாரிசு என்கிறார்கள்.