சிங்கம் புலியை காமெடியனாக தெரியும்.. அஜித், சூர்யாவை டைரக்ட் செய்த படம் தெரியுமா.?

நம்ம சினிமாவை பொறுத்தவரை நடிகர் நடிகைகளை மட்டும் தான் எல்லாரும் கவனிப்பார்கள். ஆனால் இப்பலாம் படத்தின் இயக்குனர்களை பற்றி பேசுகிறார்கள். இந்த டைரக்டர் படம் என்றால் யார் நடித்தாலும் நம்பி போகலாம் பா..! என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

ஆனால், 10 வருடங்களுக்கு முன்பு வரை கதையே வேறு, ஒரு திரைப்படம் உருவாக மூல காரணமே இயக்குனர் தான் என்ற விஷயம் பல சினிமா ரசிகர்களுக்கு தெரியாது. அந்த படத்தில் நடிக்கும் நடிகர் தான் எல்லாப்புகழுக்கும் சொந்தக்காரர்.

அப்படி, இயக்குனராக இருந்து வெளியே தெரியாத இயக்குனர் சிங்கம்புலி. பிறகு, ஒரு காமெடி நாயகனாக மக்கள் மத்தியில் நல்ல புகழ் பெற்றார். ஆனால், ஆரம்ப காலகட்டத்தில் இரண்டு பெரிய ஹீரோக்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்திருகிறார் இவர்.

இப்படி இருக்கும் நம்ம சிங்கம் புலியா இந்த படங்களை இயக்கியது என்று ஆச்சரியப்பட்டு போவீர்கள். அவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் இதோ,

ரெட் – அஜித், மாயாவி – சூர்யா மேலும், இரண்டு படங்களுக்கு துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் அவை, ராஜா – அஜித், ஆஞ்சநேயா – அஜித்

இதனுடன், மூன்று படங்களுக்கு வசனகர்த்தா-வாகவும் பணியாறியுள்ளார். கண்ணன் வருவான் , பேரழகன், ரேணிகுண்டா

Next Story

- Advertisement -