தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள சினிமாவில் முதன் முதலில் நடித்த இவர் தந்தையின் சிபாரிசின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்தார். தெலுங்கில் நல்ல வரவேற்ப்பையும் பெற்றார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது இவர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் பெரும் நடிகையாக வளர்ந்து இருக்கிறார். இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இவரின் தாய் மேனாகா சுரேஷ் கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  Rakul Preet Singh Latest Stills

Sponsored Content

இப்படிப்பட்ட கீர்த்தி சுரேஷ் திரைத்துறையில் நுழைய பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது. நடிக்க போகிறேன் என்று முதலில் கூறியதும், அனுப்பமாட்டோம், முடியாது என்று கூறி தடை போட்டுள்ளனர் இவரின் பெற்றோர்.

பிறகு, பல வேலைகள் செய்து தான் கீர்த்தி சுரேஷ் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். இதன் முதற்கட்டமாக, தனது இஷ்ட தெய்வத்திற்கு தினமும் தேங்காய் உடைத்து பூஜை செய்து வந்துள்ளார். அதனுடன், இவரின் நெருங்கிய தோழியிடம் உன் பெற்றோருக்கு மகளாக பிறந்திருந்தால் என்னை நடிக்க அனுப்பி இருப்பார்கள் என்றெல்லாம் கூறி களேபரம் செய்துள்ளார்.

அதிகம் படித்தவை:  அடிச்ச அடிக்கு சிறை செல்லும் தாடி பாலாஜி.! அதுவும் எத்தனை வழக்கு தெரியுமா?

 

இனியும் மகளின் ஆசைக்கு தடை போடுவது அவ்வளவு சரியாக இருக்காது என்று எண்ணி கீர்த்தி சுரேஷ்-ன் தந்தை சுரேஷ் அவர்கள் சினிமாவில் நடிக்க ஒப்புதல் வழங்கியுள்ளார்.

தன் தந்தை ஒரு தயாரிப்பளார் என்பதால் எந்த வித சிரமும் இன்றி எளிதாக திரைத்துறையில் நுழைந்துவிட்டார் கீர்த்தி சுரேஷ்.