செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும், குரங்கிடம் தான் மனம் செல்லுமாம்.. உலக அழகிக்கே இந்த நிலைமைனா

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் இடையில் விவாகரத்து நடைபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றது. ஆனால் இவர்கள் இருவர் தரப்பில் இருந்தும் இதுவரை வாய் திறக்காததால் இந்த செய்திகள் இப்போதுவரை கிசுகிசுக்களாகவே உலா வருகின்றது.

இப்படியான கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தாலும், இதை எதையும் தலையில் ஏற்றுக்கொள்ளாமல் எதற்கும் பதிலளிக்காமல், இருவரும் கடந்து செல்கின்றனர். இந்த நிலையில் அபிஷேக் ஐஸ்வர்யாவை ஏமாற்றி விட்டார், அவர் வேறு ஒரு நடிகையுடன் டேட்டிங்கில் இருக்கிறார் என்ற செய்தியும் வளம் வருகிறது.

இந்த பிரச்சனையை எல்லார்வற்றிருக்கும் வித்திட்டது இரண்டு நிகழ்வுகள். அதில் ஒன்று அம்பானி வீட்டு திருமணம். இருவரும் தனி தனியாக கலந்துகொண்டனர். இது இவர்களுக்குள் இருக்கும் புகைச்சலை உறுதி செய்தது. மேலும் சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் தனது 51-ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அப்போது அவருக்கு சமூக ஊடங்களில் அபிஷேக் வாழ்த்து தெரிவிக்காமல் இருந்தது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

உள்ளுக்குள் புகுந்த நடிகை

இதற்க்கு நடுவில், இவர்கள் பிரச்சனைக்கு காரணமாக முக்கியமான ஒரு நடிகை இருக்கிறார். அவர் உள்ளே புகுந்த நாள் முதல் தான் இந்த பஞ்சாயத் எல்லாம் மங்களகரமாக ஆரம்பித்தது. அபிஷேக் பச்சன் நடிகை நிம்ரத் கவுர் உடன் டேட்டிங்கில் உள்ளார்.

அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்யவுள்ளார் என பேச்சு பாலிவுட் உலகில் அடிபடுகின்றது. இந்நிலையில் இது தொடர்பாக தனியார் ஊடகம் எழுப்பிய கேள்விக்கு, நடிகை நிம்ரத் கவுர் அளித்துள்ள பதில் பலரது சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

மேலும் தஸ்வி படத்தின் புரோமோஷனின் போது, நடிகை நிம்ரத் கவுருடன் இணைந்து அபிஷேக் பச்சன் பேட்டி அளித்திருந்தார். அப்போது அவரிடம் அவரது 15 ஆண்டு கால திருமண பந்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் பதில் அளித்துக் கொண்டு இருந்தபோது, நடிகை நிம்ரத் கவுர், ” திருமணங்கள் நீண்ட காலம் நீடிக்காது” எனத் தெரிவிக்கின்றார். உடனே அதைக் கேட்ட அபிஷேக் பச்சன், நன்றி எனக் கூறிய வீடியோவையும் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து ரசிகர்கள், “என்ன செய்வது, பொண்டாட்டி கிளி போல இருந்தாலும், குரங்கிடம் தான் மனம் செல்கிறது” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News