Videos | வீடியோக்கள்
அபிராமி தியேட்டர் இடித்து தள்ளபடுகிறது.! உலகில் இல்லாத அதிசியங்களுடன் உருவாகும் பிரமாண்ட கட்டிடம்.!

சென்னையில் உள்ள அபிராமி திரையரங்கம் 1976 இல் தொடங்கப்பட்டது, முதலில் சென்னையில் மவுண்ட் ரோட்டில் மட்டும்தான் படம் பார்க்கும் நிலைமை இருந்தது அதனை மாற்றி அமைக்கும் விதமாக புரசைவாக்கத்தில் முதல் முதலாக அபிராமி திரையரங்கம் தொடங்கப்பட்டது.

AbiramiMegaMall
அதேபோல் புரசைவாக்கத்தில் முதல் ஏசி திரையரங்கம் கொண்டுவரப்பட்டது இங்குதான், அதேபோல் பல புதுமைகளை அப்போது இவர்தான் முதன்முதலில் கொண்டு வந்தார்கள் டிடிஎஸ் சவுண்ட், led ப்ரொஜெக்டர், போன் செய்தால் வீட்டு கேட்டுக் கொண்டு செல்வது என பல புதிய முயற்சிகளை முதன் முதலாகத் தொடங்கியது இந்த அபிராமி திரையரங்கில் தான்.
அதைப்போல் முதல்முறையாக திரையரங்கையும் மால் களையும் ஒரே இடத்தில் வைத்ததும் இவர்கள்தான் மேலும் திரையரங்கில் ஆயிரம் சீட்கள் இருக்கும் திரையரங்கு வேலைக்கு ஆகாது ஏனென்றால் படத்தை டிஜிட்டல் சேவைக்கு விற்றுவிடுகிறார்கள் அதேபோல் டிஜிட்டல் சேவை அதிகமாகி கொண்டே இருக்கிறது, அதனால் அபிராமி திரையரங்கு புதிய விஸ்வரூபம் எடுக்க இருக்கிறது.
அபிராமி இருக்கும் இடத்தில் புதிய கட்டடம் அமைக்க இருக்கிறார்கள் அதில் 8 லிருந்து 10 திரையரங்கமும் மேலும் ரெசிடென்சி கட்டிடங்களும் ஒரே இடத்தில் அமைக்க இருக்கிறார்கள் இது கிட்டத்தட்ட இருபது மாடிகளுக்கு மேல் இருக்கும் என கூறியுள்ளார்கள்.
மேலும் இந்த புதிய கட்டிடத்தில் 10 திரையரங்கம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார் அதில் புதிதாக பல விஷயங்களை சேர்த்துள்ளார்கள் அதில் ஒன்று 200 பேர் இருக்கும் திரையரங்கில் வெறும் 60 பேர் மட்டுமே படம் பார்க்கும் படி அமைக்கப்பட இருக்கிறது அதுவும் படுத்துக்கொண்டே படம் பார்க்கும் படி அமைக்க இருக்கிறார்கள் மேலும் சில வசதிகள். இந்த வீடியோவை பாருங்கள்
