Connect with us
Cinemapettai

Cinemapettai

salman-aishwarya-rai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராய் கணவருக்கு ஏற்பட்ட விபத்து.. தள்ளிப்போகும் பார்த்திபனின் படப்பிடிப்பு

எப்போதுமே இந்தி சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் அபிசேக் பச்சன். இப்போதும் அடுத்தடுத்த பல படங்களின் கமிட்மென்ட்டில் இருப்பவர் தான் அபிசேக்.

நடிகர் அமிதாப் பச்சனின் மகனும் நடிகை ஐஸ்வர்யா ராயின் கனவருமான அபிசேக் பச்சன் வருடத்திற்கு சில படங்களை வெளியிடுவதை வழக்கமாகவே கொண்டுள்ளார். இந்நிலையில் ஒரு படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் அபிசேக்கின் கையில் அடிபட்டுள்ளது.

இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் அபிசேக். மருத்துவமனையில் இருந்த அபிசேக்கை அவரது அப்பா மற்றும் சகோதரி இருவரும் பார்க்க சென்ற போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது.

அதனை தொடர்ந்து மனைவி ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் நடந்து வந்த நிலையில் கணவருக்கு விபத்து ஏற்பட்ட செய்தி தெரிய வந்துள்ளது.

படப்பிடிப்பில் இருந்து வந்த ஐஸ்வர்யா ராய் பாதியில் நிறுத்திவிட முடியாமல் அவருக்கான பணிகளை முடித்து கொடுத்துவிட்டு தன் கணவரை பார்க்க மருத்துவமனை விரைந்தார் ஐஸ்வர்யா ராய் அவரது மகளுடன் கணவர் அபிசேக்கை பார்க்க வந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கையில் ஏற்பட்ட காயத்திற்காக சிறிது கால ஓய்வும் மேலும் படப்பிடிப்புகளை தள்ளிப்போடும் படியும் கூறியுள்ளனர். மேலும் இயக்குனர் ஆர்.பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடிகர் அபிசேக் பச்சன் நடித்து வருகிறார்.

அந்த படப்பிடிப்பு தளத்தில் தான் காயம் ஏற்பட்டதாக ஒரு செய்தி பரவி வருகிறது எனினும் படக்குழுவிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இப்போது இல்லை.

os 7

Continue Reading
To Top