கே கே ஆர் அணியில் ஆலோசகராக இணைந்த தினேஷ் கார்த்திக்கின் நெருங்கிய நண்பர் !

அபிஷேக் நாயர் கொல்கத்தா அணியில் ஆலோசகராக இணைந்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

11 வது ஐபில் சீசன் துவங்குவதற்கு முன்பில் இருந்தே அழகாக திட்டம் தீட்டி களத்தில் இறங்கிய அணிகளில் இவர்களும் ஒருவர் தான். முன்னாள் கப்டன் கம்பிர் அவர்களை ஏலத்தில் எடுக்கவில்லை. புதிய காப்டன் ஆக லின், உத்தப்பா என பலரின் பெயர் பரிசீலனை செய்யப்பட்டாலும், இறுதியில் அது தினேஷ் கார்த்திக் வசம் சென்றது.

அணி நிர்வாகத்தின் முடிவிற்கு ஏற்றார் போல தினேஷ் கார்த்திக்கும் இலங்கையில் நடந்த நிதாஸ் கோப்பை பைனல் போட்டியில் அசத்தல் பேட்டிங் செய்து பலரது பாராட்டையும் பெற்றார்.

DK – Abhisekh Nayar

அதே போல் அந்த வெற்றிக்கு பின் பல பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்பொழுது அபிஷேக் நாயர் கார்த்திக் இதுவரை செய்யாத, அல்லது செய்ய தயங்கிய பல காரியங்களை செய்ய வைத்தார் என்றும். போட்டிக்கு தயாராகும் மனநிலையை அடைய அவர் உதவியதாகவும் கூறினார். மேலும் நாயர் தனக்கு செய்தவற்றை வார்த்தைகளால் கூறிவிட முடியாது. அவர் காரியரில் செய்த தவறுகளை கார்த்திக் செய்யாமல் அவர் பார்த்துகொண்டார் என்றும் கூறினார்.

இந்நிலையில் மும்பையின் முன்னாள் ஆல்- ரௌண்டரான அபிஷேக் நாயரை கொல்கத்தா கோச்சிங் ஸ்டாபில் ஆலோசகராக இணைந்துள்ளார்.

இதனால் இளம் வீரர்கள் பலர் பலன் அடையக்கூடும், என அணியின் சி இ ஓ தன அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.