புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ராகவ் பேசிய பேச்சுக்கு அபி கொடுத்த தண்டனை.. முரளி பற்றி தெரியாமல் பிடிவாதம் பிடிக்கும் அஞ்சலி

Nee Naan Kadhal Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற நீ நான் காதல் சீரியலில், இத்தனை நாள் எதற்காக ராகவ் நம்மளை வெறுக்கிறார், சண்டை போடுகிறார் என்று காரணம் தெரியாமல் அபி குழப்பத்திலேயே இருந்தார். ஆனால் தற்போது அபிக்கு ராகவின் மனநிலை புரிந்து விட்டது. அதாவது கண்ணால் பார்ப்பது எல்லாம் பொய் என்பதற்கு ஏற்ப ராகவ், அபியை தவறாக நினைத்து ஒதுக்கி வந்திருக்கிறார்.

அந்த விஷயம் அனைத்தும் தற்போது அபிக்கு தெரிந்த நிலையில் அபி என்ன சொல்ல வருகிறார், அதில் என்ன உண்மை இருக்கிறது என்று கூட கேட்க தயாராக இல்லாமல் தொடர்ந்து அபியை கஷ்டப்படுத்தும் விதமாக ராகவ் வார்த்தையாலே கொட்டி விடுகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் உச்சகட்ட கோபத்திற்கு போன அபி, தான் எப்படிப்பட்டவள் என்பதை தீயில் குதித்து உங்ககிட்ட நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை.

இனி உங்கள் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன், என்னை தேடி என்னுடைய வீட்டிற்கு வந்து விடாதீர்கள் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். இதனால் அபி இல்லாமல் வீட்டுக்கு போன ராகவ் இடம் அஞ்சலி மற்றும் பாட்டி சண்டை போடுகிறார்கள். உடனே அஞ்சலி நான் போய் கூப்பிட்டால் அபி வந்து விடுவாள் என்று சொல்லி அபி வீட்டிற்கு போகிறார்.

அஞ்சலி கிளம்பியதால் ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து அபி வீட்டுக்கு போய் விடுகிறார்கள். அப்பொழுது அஞ்சலி, அபியை வீட்டுக்கு வா என்று கூப்பிடுகிறார். ஆனால் அபி வரமாட்டேன் என்று பிடிவாதமாக சொன்ன நிலையில் அஞ்சலி நீ இல்லாமல் நான் போக மாட்டேன் என்று வாசலிலே நின்று கொண்டிருக்கிறார். அப்பொழுது மழை கொட்டுது. ஆனாலும் அபி, என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள் நான் வரமாட்டேன் என்று சொல்லி உள்ளே போய்விடுகிறார்.

அபி குடும்பத்தில் உள்ளவர்கள் அஞ்சலி மற்றும் அனைவரையும் உள்ளே கூப்பிடுகிறார்கள். ஆனாலும் யாரும் நகராமல் அதே இடத்தில் மழையில் நனைந்து கொண்டிருப்பதால் அபி, அஞ்சலி காலில் விழுந்து என்னை மன்னித்து விடுங்கள். தயவுசெய்து நான் அந்த வீட்டிற்கு வர மாட்டேன் என்று சொல்கிறார்.

உடனே அஞ்சலி என் உயிரே போனாலும் பரவாயில்லை. நீ இல்லாமல் நானும் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லி இருவரும் குடும்பமும் மழையில் நனைந்தபடியே வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள். அஞ்சலி மற்றும் அபியின் பிடிவாதத்தால் ராகவ் என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் முரளி பற்றி தெரியாமல் அஞ்சலி அவருடைய கணவரை முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிறார். முரளி எப்படிப்பட்டவர் என்பதை நிரூபிக்கும் விதமாக அபி என்ன செஞ்சாலும் அதில் பாதிக்கப்படுவது அஞ்சலிதான் என்பதால் அபியும் அமைதியாக இருக்கிறார். இருந்தாலும் தன்னை ராகவ் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் என்பதால் அபிக்கு மனதளவில் மிகப்பெரிய ஏமாற்றம் ஆகி இருக்கிறது.

அட்லீஸ்ட் அபி என்ன சொல்ல வருகிறார் என்பதை ராகவ் கொஞ்சம் காது கொடுத்து கேட்டிருந்தால் இந்த பிரச்சனை இவ்வளவு தூரம் வந்திருக்காது. இதற்கு அடுத்தாவது முரளி எப்படிப்பட்டவர் எந்த சூழ்நிலையில் அபி முரளி பழகினார்கள் என்பது ராகவுக்கு தெரிந்தால் கதை சுவாரசியமாக இருக்கும்.

- Advertisement -

Trending News