Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மூக்குத்தி அம்மனாக மாற அபிராமி செய்த செயல்.. இதுலாம் ஓவரா நக்கலா இல்லையா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அபிராமி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார். அபிராமி பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்ட போது முகின் உடன் காதல் ஏற்பட்டதாக அப்போது சர்ச்சை வெடித்தது.

இந்நிலையில் அஜீத் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் அபிராமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தார். அதன்பிறகு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளரான நீருப், அபிராமி இருவரும் ஏற்கனவே காதலித்த பிரேக்கப் ஆனவர்கள் என்ற செய்தி வெளியானது.

இந்நிகழ்ச்சியில் அபிராமி புகைபிடித்த காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அபிராமியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இணையத்தில் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி அவ்வபோது ரசிகர்கள் மத்தியில் உரையாடி வருகிறார்.

அந்தவகையில் தனது இன்ஸ்டாகிராமில் மூக்குத்தி அம்மன் அவதாரம் எடுக்க ஒரு தேர்தல் நடத்தியுள்ளார். அதாவது மூக்கில் வளையம் போடுவதற்காக வாக்கெடுப்பு நடத்தி உள்ளார். இதில் வரும் வாக்குகளை பார்த்து போடலாமா இல்லை வேண்டாமா என்ற முடிவை அபிராமி எடுக்கலாம் என்று தீர்மானித்துள்ளார்.

அதன்படி அபிராமி மூக்குத்தி போட வேண்டும் என 58 சதவீத பேரும், போட வேண்டாம் என 42 சதவீத பேரும் வாக்களித்துள்ளனர். இதனால் மூக்குத்தி போட வேண்டும் என 58 சதவீத பேர் வாக்களித்ததால் மூக்கில் வளையத்தை போட்டுக் கொண்ட அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் அபிராமி வெளியிட்டுள்ளார்.

abhirami

இதைப்பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு ஓவர் நக்கலா இல்லையா என கலாய்த்து வருகின்றனர். மேலும், ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தை கூட இப்படி ரசிகர்களை கேட்டு செய்ய வேண்டுமா, மேலும் எதற்கெல்லாம் தேர்தல் நடத்த வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் போச்சு என ரசிகர்கள் அபிராமியை கிண்டல் செய்து வருகிறார்கள்.

Continue Reading
To Top