ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

விவாகரத்தை பற்றி வெளிப்படையாக கூறிய அபிநய் மனைவி.. பிக்பாஸ் நல்ல செஞ்சு விட்டுட்டீங்க போல

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 வில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் தெரிந்த முகங்களை விட தெரியாத முகங்களே அதிகமாக இருந்தது. அதில் ஒருவர்தான் அபிநய். இவர் திரை குடும்பத்தை சேர்ந்தவர். அதாவது பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி ஆகியோரின் பேரன் ஆவார்.

இந்நிலையில் அபிநய் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரமே நாமினேசனில் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட எல்லா வாரங்களுமே நாமினேஷனில் தேர்வு செய்யப்பட்ட கடைசி நிமிஷத்தில் காப்பாற்றப்பட்டார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு காதல் ட்ராக் இருக்கும்.

அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 5 இல் அபிநய் மற்றும் பாவனி இடையே காதல் இருப்பதாக சர்ச்சை உண்டானது. அதாவது அபிநய் எப்பொழுதுமே பாவனியுடன் இருப்பது, அவருடன் மட்டுமே பேசுவது என்றே இருந்தார். இதனால் ஹவுஸ் மேட் அனைவருக்கும் பாவனியை அபிநய் காதலிக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது.

அதை நேராகவே ராஜு பாய் அபிநயிடம் ஒரு டாஸ்கின் போது கேட்டுவிட்டார். ஆனால் அப்படியெல்லாம் இல்லை என அதனை மறுத்து விட்டார் அபிநய். அதன் பிறகு கிட்டத்தட்ட 77 நாட்களுக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அபிநய் வெளியேறினார்.

அப்போது அபிநய் மனைவி அபர்ணா தனது சமூக வலைத்தள பக்கத்தில் கணவன் பெயரை நீக்கி இருந்தார். இதனால் இவர்களுக்குள் விவாகரத்தால் உள்ளதா என்ற பெரிய கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விவாகரத்து குறித்த ஒரு பதிவு போட்டு உள்ளார்.

அதாவது விவாகரத்துக்கு பின்பு பெண்களுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும். இதுவே ஒரு ஆண், பெண் சமத்துவம் என குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது பலரையும் ஆச்சரியத்திற்கு உண்டாக்கியுள்ளது. மேலும் அபிநய் , அபர்ணா இடையே கருத்து வேறுபாடு உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், பிக்பாஸில் கலந்து கொண்டதினால் அபிநய் பெயர் மட்டும் தான் பரிபோனது என்றால் தற்போது வாழ்க்கையும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 Aparna Abhinay
Aparna Abhinay

 

 

- Advertisement -spot_img

Trending News