இரும்புத்திரை மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் “ஹீரோ” படத்தில் வில்லனாக இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.

விஷாலின் இரும்புத்திரை தொடர்ந்து பி எஸ் மித்ரன் இயக்கு ம் படம் “ஹீரோ”. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் இசை . எடிட்டராக ரூபன் மற்றும் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ் கமிட் ஆகியுள்ளனர்.

இப்படத்தின் கதாநாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் ‘நாச்சியார்’ இவானா நடிக்கின்றனர். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் நடிக்கிறார். இரும்புத்திரை போல இவர் தான் வில்லனோ என்ற கிசு கிசு அடிபட்டுவந்த சூழலில், படத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் அபய் தியோல் இணைந்திருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

அபய் சற்றே சாலெஞ்சிங் ரோல்களாக தான் தேர்தெடுத்து நடிப்பவ ர். ஏற்கனவே தமிழில் “இது வேதாளம் சொல்லும் கதை” படத்தில் நடித்துள்ளார். படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை.

abhay deol

இந்நிலையில் இப்படத்திலும் இணைந்துள்ளார்.

Leave a Comment