fbpx
Connect with us

80 வயதே ஆனாலும் தோனி கட்டாயம் என் டீம்மில் இருப்பார் – ஏ பி டிவிலியர்ஸின் அதிரடி பதில்.

Sports / விளையாட்டு

80 வயதே ஆனாலும் தோனி கட்டாயம் என் டீம்மில் இருப்பார் – ஏ பி டிவிலியர்ஸின் அதிரடி பதில்.

தோனி

இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். மூன்று வித பார்மட்டிலும் இந்தியாவின் சிறந்த கேப்டனும் இவர் தான். 37 வயதிலும் மின்னல் வேகத்தில் ஸ்டும்ம்பிங் அடிப்பது, பிட்சில் வேகமாக ரன் ஓடுவது, இமாலய சிக்ஸர்கள் அடிப்பது என்று அசத்துகிறார் மனிதர்.

எனினும் சமீபகாலமாக இவரின் பேட்டிங் முன்பு போல எடுபடுவதில்லை என்றால் அது மிகையாகாது. குறைவான ஸ்ட்ரிக் ரேட், கம்மியான ஆவரேஜ், ஆட்டத்த்தை பினிஷ் செய்ய்வதும் இல்லை என்று இவரது பேட்டிங்கின் மேல் பல குறைகள் எழுந்து வருகின்றது.

AB DEVILLERS feat

இந்நிலையில் தோனியின் மோசமான பேட்டிங் பார்ம், அவர் ஒய்வு பெறவேண்டுமா என்று டீவில்லியர்ஸிடம் கேட்டபொழுது அவர் சிரித்தபடி பதிலளித்துளார்.

”ஒரு ஆண்டின் 365 நாள்களிலும் என்னுடைய அணியில் தோனி இடம்பிடிப்பார். அவருக்கு 80 வயது ஆனாலும், சக்கர நாற்காலியில் அமரும் நிலையிலும் நான் அவரைத் தேர்வு செய்வேன்; அவர் எனது அணிக்காக விளையாடுவதை உறுதி செய்வேன். அவர் ஒரு சிறந்த வீரர்; அவரது ரெக்கார்டுகளைப் பார்த்தாலே இது தெரியும். அப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் அணிக்குத் தேர்வு செய்யாமல் இருப்பீர்களா?. நான் அதை நிச்சயம் செய்ய மாட்டேன்.” என்று கூறினார் அவர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Sports / விளையாட்டு

Advertisement

Trending

To Top