2.5 கோடி மோசடி.. விஜயகாந்த் பட வெற்றி இயக்குனரை அலேக்காக தூக்கி 5 வருடம் சிறை

விஜயகாந்த்தை வைத்து ஊமை விழிகள், செந்தூரப்பூவே மற்றும் உழவன்மகன் போன்ற பல படங்களை இயக்கியவர் ஆபாவாணன். இவரது இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றன.

அதன் பிறகு ஆபாவாணன் பல நடிகர்களுடன் இணைந்து படங்களை இயக்கியுள்ளார். தொடர்ந்து படங்களை இயக்கி வந்த ஆபாவாணன் கடைசியாக கருப்பு ரோஜா என்னும் படத்தை தயாரித்து வெளியிட்டு உள்ளார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

இதனால் இவருக்கு நிதி நெருக்கடியும் ஏற்பட ஆரம்பித்தது. அதனால் பிரபல வங்கியில் கடன் வாங்கியுள்ளார். ஆபாவாணன் 1999ஆம் ஆண்டு சென்னையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2.5 கோடி காசோலையை முறைகேடாக பயன்படுத்தியுள்ளார்.

best-aabavaanan-thriller-movies-cinemapettai
best-aabavaanan-thriller-movies-cinemapettai

இதனால் இவருக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. மேலும் 2.40 கோடி அபராதம் கொடுக்கும்படி உத்தரவிட்டது. ஆபாவாணன்க்கு உதவிய வங்கி மேலாளர் அவர்கள் இருவரையும் ஒருவருக்கு தலா 15 லட்சம் ரூபாய் அபராதமும் 3 வருட சிறை தண்டனையும் மற்றவருக்கு 10 லட்சம் அபராதமும் 3 வருட சிறைத்தண்டனை வழங்கியது.

அதன்பிறகு இவர் பெரிய அளவில் படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஆபாவாணன் தண்டனை காலத்திற்கு முன்னதாகவே சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்துவிட்டார். பின்பு சினிமா விட்டு பல காலங்களாக விலகியுள்ளார்.

இந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆனாலும் தற்போது ரசிகர்கள் இதைப் பற்றிக் கேட்டாலும் வருத்தமாகத்தான் உள்ளது. ஏனென்றால் தமிழ் சினிமா இது போன்ற ஒரு திறமையான இயக்குனரை ஒதிக்கி விட்டார்களா என்பதுதான் தெரியவில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்