Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனக்கும் சூர்யாவுக்குமான வயது வித்தியாசம் பற்றி பேசிய அபர்ணா- எய்தவன் இருக்க அம்பை நோவானேன்

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் நேரடி OTT ரிலீசில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள படம் சூரரை போற்று. இந்தப் படம் வெளியானதில் இருந்தே சூர்யா, ஊர்வசி மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோரின் நடிப்பு பற்றி அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

அபர்ணா பாலமுரளி மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர். நம் கோலிவுட்டில் 8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இது வரை குறைந்த பட்ஜெட் படங்களில் அடக்கமான ரோல்களில் நடித்தவர். இவர் தான் ஹீரோயின் என்ற அறிவிப்பு வந்த நேரத்தில் ஏகப்பட்ட சூர்யா ரசிகர்கள் அப்செட் ஆனார்கள். ஆனால் படம் வந்த பின் தாறுமாறாக நடித்திருப்பது தெரியவந்தது. தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார்.

இவர் முன்னணி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் ‘ஹீரோ ஹீரோயின் வயது வித்யாசம் அதிகமாக இருப்பது பற்றி பலரும் விவாதிக்கின்றனர், அதை பற்றி உங்கள் கருத்து?’ என கேள்வி கேட்கப்பட்டது.

“எனக்கும் சூர்யா சார்க்குமே அதிக வயது வித்யாசம் தான் (சூர்யாவுக்கு 45 வயது, அபர்ணாவுக்கு 25) , ஆனால் நாங்கள் அந்த படத்தில் கதாபாத்திரத்தில் நடிக்கிறோம். நான் அந்தநேரத்தில் அபர்ணா அல்ல பொம்மி. நீங்கள் சூர்யா சாரை பாருங்கள் அவர் என்னை விட வயது முதிர்ந்தவர் என யாருமே சொல்லமாட்டார்கள். எனக்கும் அது போன்ற உணர்வு ஏற்படவில்லை.” என பதில் சொல்லியுள்ளார்.

suriya-soorarai-potturu-1

suriya-soorarai-potturu-1

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் !

Continue Reading
To Top