reb

விராட் கோலி

இந்தியா என்ற இடத்தை தாண்டி, உலகளவில் தலை சிறந்த பேட்ஸ்மேன் என்ற இடத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பவர். தன் ஆரம்பகால நாட்களில் டெஸ்ட் போட்டிகளில் சற்று சொதப்பினார், பின்னர் அதிலும் மனிதர் கெத்து காட்ட ஆரம்பித்துவிட்டார். இன்று நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் மனிதர் பத்தாயிரம் ரன்களை கடக்கவும் வாய்ப்புள்ளது.


இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ள டிவிலியர்ஸ் அவர்களிடம் , இந்திய அணியின் கேப்டன் விராட் பற்றி கேட்கப்பட்டது.

ab devillers

‘கடந்த சில ஆண்டுகளாக கேப்டனாக விராட் கோலி முன்னேறி வருகிறார், தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளார். மிகவும் சிறந்த கேப்டனாக தேறி வருகிறார். ஒரு பேட்ஸ்மேனாக அவர் இன்னும் சில விஷயங்களில் முன்னேற வேண்டி இருக்கிறது. மொத்தத்தில் அவர், தனது கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் உள்ளார். விராட் கோலியுடன் பேட்டிங் (ஆர் சி பி) செய்வது மிகவும் எளிது. நமது திட்டத்தை புரிந்துகொண்ட ஒருவருடன் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கும் , கோலி அப்படிப்பட்ட ஒருவர் தான். அவருக்கு ரொனால்டோவை மிகவும் பிடிக்கும். அதனால், அவர் ரொனால்டோ என்றால், நான் மெஸ்ஸி’’ என்று அவர் விளையாட்டாக கூறி முடித்துள்ளார்.