Tamil Cinema News | சினிமா செய்திகள்
தன் வெற்றியை விவேக்கிற்கு அர்ப்பணித்த ஹிப் ஹாப் ஆதி! தந்தையர் தின ஸ்பெஷல்

மீசையை முறுக்கு
௨௦௧௭ இல் வெளியான இப்படத்தை பார்த்துவிட்டு பாராதவர்களே கிடையாது. இசைப்பின்னணி கொண்ட இப்படம் ஆதியின் வாழ்க்கையை கற்பனை கலந்து நம் கண் முன்னே காட்டியது. ஆதி தான் படத்தின் இயக்குனர் ஆதி, ஆத்மிக்கா, விக்னேஷ்காந்த் முக்கிய வேடத்தில் நடித்தனர். மேலும் விவேக் மற்றும் விஜயலெட்சுமி துணை கதாபாத்திரங்களாக அசத்தி இருப்பார்கள். படத்தில் ஆதி மற்றும் விவேக்கின் கெமிஸ்ட்ரி அப்பொழுதைய ட்ரெண்டிங் சமாச்சாரம். வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக பார்ப்பது, தன் மகனின் எதிர்காலம் மீது அக்கறையாக இருப்பது என்று கெத்தாக மீசையை முறிக்கியிருப்பார் விவேக்.
சமீபத்தில் ஆதி அவர்களுக்கு சிறந்த என்டேர்டைனர் விருது வழங்கப்பட்டது. அதற்கே அதே தன் ட்விட்டரில் நன்றிகளை பதிவிட்டார். மேலும் சுந்தர் சி, குஷ்பூ அவர்களுக்கு நன்றியை சொன்ன ஆதி, தந்தையர் தினமான இன்று இந்த வெற்றியை விவேக்கிற்கு சமர்ப்பிப்பதாகவும் சொல்லியுள்ளார்.
விவேக்கும் தன் நன்றியை சொன்னார்.
