Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆசை படத்தில் அஜீத்துக்கு குரல் கொடுத்தது யார் தெரியுமா? அதுவும் இந்த பிரபல நடிகர் தான்
தல அஜித்தின் சினிமா வாழ்க்கையில் திரும்பி பார்க்க வைத்த படம் என்று பார்த்தால் அதில் ஆசை திரைப்படமும் கண்டிப்பாக இருக்கும். 1995 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக சுவலட்சுமி நடித்திருப்பார்.
இயக்குனர் பாலச்சந்திரனிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த வசந்த் இந்த படத்தை இயக்கியிருப்பார். அஜித் மற்றும் சுவலட்சுமி இருவருக்குமான காதல் காட்சிகளை மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார்.
இவர்களுடன் சேர்ந்து பிரகாஷ்ராஜ், ரோகினி, நிழல்கள் ரவி, வடிவேலு போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள். தேவாவின் இசை இந்த படத்திற்கு இன்னும் சுவாரஸ்யத்தை சேர்த்தது என்றே கூறலாம்.
தல அஜித்தின் துறுதுறுப்பான அந்த நடிப்பு மற்றும் கதையில் உள்ள சஸ்பென்ஸ் என்று இந்த படம் இன்றளவும் ரசிக்கும்படியாக அமைந்தது. ஆசை படத்திற்காக முதன்முதலில் வசந்த் அணுகியது சூர்யாவைத்தானாம்.
தனது ஆரம்ப கட்டத்தில் தமிழ் பேச மிகவும் தடுமாறுவாராம் தல அஜித். அதனால் ஆசை படத்துக்காக பிரபல நடிகர் சுரேஷ் தான் தல அஜீத்துக்கு டப்பிங் கொடுத்துள்ளார். இவர் தல அஜித்துடன் இணைந்து அசல் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

suresh-actor
