கேப்டனாக அதிரடி ஆக்ஷனில் இறங்கிய ஆர்யா.. கொடூர மிருகத்துடன் வெளிவந்த போஸ்டர்

எனிமி திரைப்படத்தை அடுத்து ஆர்யா தற்போது கேப்டன் மற்றும் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படம் என்று பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கேப்டன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரல் ஆகியுள்ளது.

ஆர்யாவின் நடிப்பில் வெளியான டெடி திரைப்படத்திற்கு பிறகு ஆர்யா மற்றும் சக்தி சௌந்தர்ராஜன் இருவரும் இந்தத் திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த கூட்டணியில் சிம்ரன், ஐஸ்வர்ய லட்சுமி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர்.

ஆக்ஷன் திரில்லர் கலந்து உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார். இந்த போஸ்டரில் ஆர்யா கையில் துப்பாக்கியுடன் ராணுவ வீரர் தோற்றத்தில் இருக்கிறார். அவருக்குப் பின்னால் ஒரு பயங்கர விலங்கும் இருக்கிறது.

மேலும் இப்படம் ஏலியன் சம்பந்தப்பட்ட கதை அம்சம் கொண்டுள்ளதால் ஹாலிவுட் தரத்திற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

தற்போது ஆர்யாவின் கேப்டன் படத்திற்கு சந்தானம், கலையரசன் உள்ளிட்ட பலரும் சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தொடர்ந்து வித்தியாசமான கதையை ரசிகர்களுக்கு கொடுத்துவரும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜனுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பல இயக்குனர்கள் தங்கள் கேரியரில் ஒரு வித்யாசமான படத்தை கொடுக்க முடியாமல் திணறுகிறார்கள். ஆனால் இவர் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஒரு வித்தியாசத்தை காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அதேபோல் ஆர்யாவின் டெடி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தது. அந்த வகையில் இந்த கேப்டன் திரைப்படமும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

captain
captain