அட! இதுக்கூட ஆர்த்தி கண்ட்ரோல்ல தான் இருந்துச்சா?. ஜெயம் ரவியை பார்த்தாலும் பாவமா தான் இருக்கு

Jayam Ravi: உன் குத்தமா, என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல என்று இளையராஜா குரலில் ஒரு பாடல் வரும். அந்த மாதிரி தான் ஜெயம் ரவியின் திருமண வாழ்க்கையும் இருக்கிறது. ஒரு பக்கம் அவரைப் பற்றி வரும் வதந்திகளை கேட்கும்பொழுது, என்ன இப்படி இருக்கிறார் என அவர் மீது கோபம் வருகிறது.

இன்னொரு பக்கம் ஆர்த்தி ரவியை பற்றி ஒரு சில விஷயங்களை கேள்விபடும் பொழுது அட என்ன இதெல்லாம் அப்படின்னு தோணுகிறது. நேற்று பிரதர் இசை வெளியீட்டு விழாவின் போது ஜெயம் ரவி தன்னையும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் பற்றியும் வதந்தி வருவதை எந்த ன் என்று சொல்லியிருந்தார்.

அது மட்டும் இல்லாமல் நானும், கெனிஷாவும் இணைந்து எதிர்காலத்தில் ஹீலிங் சென்டர் ஆரம்பிக்கப் போகிறோம் என்று சொன்னதெல்லாம் கேட்கும்போதே கடுப்பாக இருந்தது. எந்த உறவும் இல்லை என்று சொல்கிறார் ஆனால் அந்தப் பெண்ணுடன் எதிர்கால திட்டம் வரை போட்டிருக்கிறார் என்பதுதான் இப்போது சினிமா ரசிகர்களுக்கு பெரிய கோபம்.

ஜெயம் ரவியை பார்த்தாலும் பாவமா தான் இருக்கு

மீண்டும் ஆர்த்தி ரவிக்கு ஆதரவு எழுந்து வந்த நிலையில், ஜெயம் ரவியை அவர் எந்த அளவுக்கு கட்டுக்குள் வைத்திருந்தார் என்ற விஷயம் ஒன்று ஆதாரத்துடன் வெளியாகி மீண்டும் பகீர் கிளப்பி இருக்கிறது. பொதுவாக ஜெயம் ரவிக்கு எப்போதுமே பெண் ரசிகைகள் அதிகம் இருப்பார்கள்.

இப்போது விட திருமணத்திற்கு முன்பு அவருக்கு இருந்த பெண் ரசிகைகள் அதிகம். அதெல்லாம் தெரிந்துதான் ஆர்த்தி ரவியும் காதலித்து திருமணம் செய்திருப்பார். எந்த உறவிலும் நம்பிக்கை என்பது தான் அடித்தளம். சிறு சிறு ஊடல்கள் வந்தாலும் அது எல்லை மீறாமல் இருக்கும் வரை தான் மதிக்கப்படும்.

ஆர்த்தி ஜெயம் ரவி எங்கே தனக்கு துரோகம் செய்து விடுவாரோ என்ற பயத்தில் அவரை ரொம்ப இருக்க பிடித்திருக்கிறார். ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட் ஆர்த்தியின் கட்டுப்பாட்டில் தான் இருந்திருக்கிறது.

இருவருக்கும் ஆன பிரிதலுக்கு பிறகு எத்தனையோ முறை ஜெயம் ரவி அந்த அக்கவுண்ட்டை தன்னிடம் கொடுத்து விடும் படி கேட்டு இருக்கிறார். ஆனால் ஆர்த்தி ரவி அதை செய்யவே இல்லை. இதற்கிடையில் ஜெயம் ரவி மெட்டா நிறுவனத்தை அணுகி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை மீட்டெடுத்திருப்பதாக ஒரு ஸ்கிரீன் ஷாட் வைரலாகி இருக்கிறது.

உனக்கு பிடித்தவர்களை ஒரு பறவையை பறக்க விடுவது போல் பறக்க விடு, அந்த உறவு உனக்கானது என்றால் அது உன்னிடமே திரும்ப வரும் என்ற வரிகள் தான் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தம்பதியினரை நினைக்கும் போது ஞாபகத்திற்கு வருகிறது.

- Advertisement -spot_img

Trending News