Tamil Cinema News | சினிமா செய்திகள்
முகம் வீங்கிப்போய் அடையாளம் தெரியாமல் மாறிப்போன பிக்பாஸ் ஆர்த்தி.. புகைப்படத்தை பார்த்து பதறிப்போன ரசிகர்கள்
நடிகை ஆர்த்தி 1987 ஆம் ஆண்டு வெளியான வண்ணக்கனவுகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு ஜோதிகாவுடன் தோழியாக அருள் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் முதன்முறையாக பாராட்டை பெற்றார். இவர் பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னதான் பல படங்கள் நடித்து வந்தாலும் ஆர்த்திக்கு அதிக மவுசு இருப்பது சின்னத்திரையில் தான். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்குபெற்று தனக்கென்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.
அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு ஐந்தாவது சீசனில் பங்கேற்றார். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் வெற்றிகண்ட ஆர்த்தி திடீரென விஜய் டிவியில் முதல்முறையாக ஒளிபரப்பான பிக்பாஸில் முதல் சீசனில் பங்கு பெற்று அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தார். அதுமட்டுமில்லாமல் அந்த சீசனில் ஜூலியுடன் இவர் செய்த சேட்டை மற்றும் சண்டைகள் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன.
சினிமாவைப் பொருத்தவரை அழகாக இருந்தால் வாய்ப்பு கிடைக்காது எனக் கருதி பல நடிகைகள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்வார்கள். ஆனால் ஆர்த்தி சினிமாவை பொறுத்தவரை அழகோ ,உடற் கட்டமைப்புபோ தேவையில்லை திறமை மட்டும் இருந்தால் போதும் என கருதி இன்று வரைக்கும் கூட உடல் எடையை குறைப்பதற்கு அவர் எந்த ஒரு முயற்சியும் செய்வதில்லை.
தற்போது ஆர்த்தி கண்ணாடியின் முன் நின்று செல்பி ஒன்றை எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

aarthi
