Videos | வீடியோக்கள்
ஆரி நடிப்பில் தமிழில் ஒரு ஏலியன் படம். வைரலாகுது “எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்” படத்தின் டீஸர்.
கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, பூந்தோட்ட காவல்காரன் என சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராவுத்தர் பிலிம்ஸ் ஒரு இடைவெளிக்கு பின் தயாரிக்கும் படம்.
பவர் ப்ளே எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்
மாயா, நெடுஞ்சாலை, நாகேஷ் திரையரங்கம் போன்ற படங்களில் நடித்த ஆரி ஹீரோ அவதாரம் எடுக்கும் படம். `நான் கடவுள்` ராஜேந்திரன், `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்` பக்ஸ் (பகவதி பெருமாள்), `கலக்கப் போவது யாரு` புகழ் ஷரத், பழநி, நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

aari – shaashvi
அறிமுக இயக்குநர் கவிராஜ் இயக்குகிறார். `ஆதித்யா மிக்ஸ்`,`காமெடிக்கு நாங்க கேரண்டி`, `மாமோய் நீங்க இருக்கீங்க` மற்றும் `கொஞ்சம் நடிங்க பாஸ்` உள்ளிட்டவற்றை ஆதித்யாவில் இயக்கியது இவர் தான். ஒளிப்பதிவாளராக லக்ஷ்மன், கலை இயக்குனராக சேகர், படத்தொகுப்பாளராக கௌதம் ரவிச்சந்திரன் பணிபுரிய; கார்த்திக் ஆச்சாரியா இசையமைக்கிறார்.
சயின்ஸ் பிக்ஷனில் காமெடி கலந்து எடுக்கப்படும் இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகி உள்ளது. இதனை ஆர்யா தன் ட்விட்டரில் வெளியிட்டார்.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
