fbpx
Connect with us

சிட்னி மைதானத்தை கலக்கிய ஆரி ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம் இதோ

Tamil Nadu | தமிழ் நாடு

சிட்னி மைதானத்தை கலக்கிய ஆரி ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம் இதோ

தமிழக மக்களுக்கு என்றுமே கிரிக்கெட் என்பது மிகவும் பிடித்த விளையாட்டு தான். தற்பொழுது மக்களின் லேட்டஸ்ட் பாவரிட் என்பது பிக் பாஸ் ஆகிவிட்டது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் மேட்சில் பிக் பாஸ் ரசிகர்கள் பிடித்த போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த மூன்றாவது டெஸ்ட் மேட்சை ட்ரா செய்து வரலாற்று சகாப்தம் படைத்தது இந்தியா. இப்போட்டியை காண வந்த ரசிகர்களில், பிக் பாஸ் வெறியர்களும் அடக்கம்.

தற்பொழுது பிக் பாஸ் 4 இறுதி கட்டத்தை எட்டி வருகின்றது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ, கேபி ஆகிய 6 போட்டியாளர்கள் வீட்டின் உள்ளே உள்ளனர். இந்நிலையில் நேர்பட பேசுவது, செயலில் சாதுர்யம் என பலரது அன்பை ஆறி பெற்றுள்ளார். ஆரி தான் பிக்பாஸ் டைட்டிலை ஜெயிக்க வேண்டும் என்பது பலரது ஆசை.

கிரிக்கெட் மைதானத்தில் “பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்… கடவுள் இருக்கான் குமாரு” வசனத்துடன் ஆரி ரசிகர்கள் போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

aari fans

ஒரு புறம் அஸ்வினுக்கு மறுபுறம் ஆரிக்கு என தங்கள் அன்பை வழங்கி திக்குமுக்காட வைத்துவிட்டனர் இந்த ரசிகர்கள்.

Continue Reading
To Top