Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸ் வீட்டில் சம்யுக்தாவை நார் நாராக கிழித்து தொங்கவிட்ட ஆரி.. பாலாவுக்கு சரியான செருப்படி
சின்னத்திரையில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் ஷோவில் தற்போது மாடல் நீதிமன்றம் அமைக்கப்பட்டு, அதில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் சுசித்ராவை நீதிபதியாக கொண்ட இந்த நீதிமன்றத்தில், கன்டஸ்ட்ண்டுகளுக்கு யார் கூட பிரச்சனை இருக்கிறதோ அதை பற்றி பேசி, யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று ஆரி மற்றும் சம்யுக்தாவிற்கு இடையேயான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சம்யுக்தாவை எப்படி எல்லாம் திட்டி தீர்க்கனும்ன்னு ஆரி நெனைச்சாரோ அதெல்லாம் செஞ்சு காட்டினார்.
அதாவது இந்த வழக்கின் போது ஆரி, ‘சம்யுக்தா இந்த வார கேப்டனாக பாலாஜி மட்டும்தான் காரணம். இதனாலதான் பாலாஜிக்கு சம்யுக்தா நிறைய ஃபேவரிசம் பண்றாங்க’ என குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஆரி, சம்யுக்தாவை ‘தருதல தருதல’ என்று மூன்று முறை திட்டியுள்ளார்.
இதற்குப் பிறகு, இறுதியாக யார் பக்கம் அதிகமா கைதூக்கி நாங்களோ அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கும் சுசித்ரா, இந்த வழக்குலயும் அதே முறையை பின்பற்றி சம்யுக்தாவுக்கு ஆதரவா தீர்ப்பு வழங்கினார்.
எனவே, நேற்றைய எபிசோடில் ஜெயிச்சது என்னமோ சம்யுக்தாவ இருந்தாலும், ஆரி நெனச்சத செஞ்சு காட்டிடார்.
மேலும் ஆரியின் தீவிர ரசிகர்கள், ‘பிக்பாஸ் நீதிமன்ற பஞ்சாயத்தை பயன்படுத்தி சம்யுக்தாவையும் பாலாஜியையும் செருப்பால அடிச்சுடாரு ஆரி’ என்று சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல், #Aari என்பதை இணையத்தில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

sanam-balaji-1
