Connect with us

Cinemapettai

பிக்பாஸில் ஒன்னுமே இல்லாத பிரச்சனையை ஊதி பெரிதாக்கிய அர்ச்சனா.. மரணகலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

suresh-archana

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸில் ஒன்னுமே இல்லாத பிரச்சனையை ஊதி பெரிதாக்கிய அர்ச்சனா.. மரணகலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

தமிழ் சின்ன திரையில் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 4. இந்த சீசன் அனுதினமும் புது திருப்பங்கள் நிறைந்ததாய் இருப்பது நாம் அறிந்ததே.

அந்த வகையில் அமைதியா எல்லாருக்கும் அறிவுரை மட்டும் வழங்கிக்கொண்டிருந்த ஆரி, நேற்றைய எபிசோடில் அர்ச்சனாவுடன் சோத்து பிரச்சனையில் ஈடுபட்டிருக்கிறார்.

அதாவது நேற்றைய பிக்பாஸ் எபிசோடில் ஆரி, ஆஜித்திற்கு பரிமாறும்போது ‘இது போதுமா? இன்னும் வைக்கவா?’ என்று கேட்டாராம்.

மேலும் இதை பார்த்துக்கிட்டிருந்த அர்ச்சனா, ‘நீங்க பரிமாற வேணாம். நான் பரிமாறிக்கிறேன்’ அப்படின்னு ஆரி கிட்ட சொன்னாங்க.

இதனை அடுத்து ஆரி அர்ச்சனாவிடம், ‘ஆஜித்துக்கு பொங்கல் பிடிக்காது. அவனுக்கு எவ்வளவு பிடிக்கும்னு எனக்கு தெரியும். அதனால தான் அப்படி சொன்னேன். என் வேலைல நீங்க தலையிடாதீங்க..’ என்று காட்டமாக பேசினார்.

இவ்வாறு பிக்பாஸ் வீட்டுக்குள் சோத்துக்காக சண்டை போடுவது, பிக்பாஸ் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top