Tamil Cinema News | சினிமா செய்திகள்
குடிக்காத பொண்ணுங்க பத்தினியும் இல்ல, குடிக்கிற பொண்ணுங்க தப்பானவங்களும் இல்ல.. பிக்பாஸ் ஆரியின் அலேகா பட ட்ரெய்லர்
தமிழ் சினிமாவில் நெடுஞ்சாலை என்ற படத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தவர் ஆரி. அதன்பிறகு இவர் தரணி உன்னோடு கா போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் எந்த படமும் நெடுஞ்சாலை படம் வெற்றியடைந்த அளவிற்கு மற்ற படங்கள் வெற்றி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களிடம் நன்கு பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இதன் மூலம் தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான பகவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
அந்த வரிசையில் நேற்று அலேகா படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தாவுடன் ஆரி இணைந்து நடித்துள்ளார்.
இதை வைத்து பார்க்கும்போது இருவருமே பிக்பாஸில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவருக்கு பிக்பாஸில் இருந்து வெளிவந்தவுடன் தொடர்ந்து இரண்டு படங்கள் திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
