Tamil Cinema News | சினிமா செய்திகள்
கௌதம் மேனன் பட நாயகியை வளைத்துப் போட்ட பிக்பாஸ் ஆரவ்.. அப்ப ஓவியா சும்மா டைம் பாஸ் தானா பாஸ்
ஆரவ் என்று சொன்னாலே நமக்கு ஞாபகம் வருவது பிக் பாஸ் ஓவியா மட்டுமே, ஏனென்றால் 2017 இல் நடந்த பிக் பாஸ் டைட்டில் வின்னராக ஆரவ் இருந்தாலும் , ஓவியா மேல் உள்ள காதலை வெளிப்படுத்தும் விதமாக விஜய் டிவி டிஆர்பி-யில் குளிர் காய்ந்தது என்றே கூறலாம்.
இது ஒருபுறமிருக்க பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தாலும் இவர்களுக்கு இடையே காதல் இருப்பதாக பேசப்பட்டது. அவர்களும் நெருக்கமாக இருக்கும் ஒரு சில புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
ஆனால் ஆரவ் திடீரென்று வரும் செப்டம்பர் 6ம் தேதி திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் ஜோஷ்வா இமை போல் காக்க படத்தின் நாயகி ‘Raahei’-வை திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.
இந்த நிக்காவில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர், கொரோனா நெருங்காத அளவிற்கு ஏற்பாடுகள் நடை பெற்று வருகிறதாம். ஒரு புறம் ஆரவ் ரசிகர்கள் திட்டினாலும், மறுபுறம் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறதாம்.
இதனால் ஓவியாவிற்கு பெரும் ஏமாற்றம், அதுமட்டுமில்லாமல் ஓவியா ஆர்மி ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். இந்த வருடத்தில் ராஜபீமா, மீண்டும் வா அருகில் வா போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஆரவ் என்பது குறிப்பிடத்தக்கது.

aarav-Raahei
