fbpx
Connect with us

Cinemapettai

பிக் பாஸ் பற்றியும், ஓவியா பற்றியும் போட்டுடைத்த ஆரவ்

oviya aarav

News | செய்திகள்

பிக் பாஸ் பற்றியும், ஓவியா பற்றியும் போட்டுடைத்த ஆரவ்

பிக் பாஸ் பற்றியும், ஓவியா பற்றியும் போட்டுடைத்த ஆரவ்
கடந்த 100 நாட்களாக தமிழகம் முழுவதும் ஒரு பரபரப்பு அலையை ஏற்படுத்திய நிகழ்ச்சி பிக் பாஸ். இதில் பல்வேறு சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். முதன் முறையாக நடிகர் கமல் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நடந்த ஓவியா, ஆரவ் காதல் விவகாரம் தமிழ்நாடு முழுவதும் விஸ்தரித்தது. அதன் மூலம் ஓவியாவிற்கு ஓவியா ஆர்மி என்னும் பெரும் ரசிகர் கூட்டம் அமைந்தது. வெளியேறிய ஓவியா தற்போது புதிய படங்கள், விளம்பரங்கள் என்று பயங்கர பிசியாகிவிட்டார்.

ஆனால் பிக் பாஸ் வீட்டிலிருந்த ஆரவ் இந்த காதல் பிரச்சனையால் ரொம்பவே அப்செட்டாகி இருந்தார். காரணம் அவர் ஓவியாவிற்கு கொடுத்த முத்தத்தை கமல் பகிரங்கமாக போட்டுடைத்ததே காரணம்.
இவ்வளவு பிரச்சனைகள் கடந்தும் ஆரவ் கடந்த வாரம் பிக் பாசின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சர்யத்தை தந்தது.

இது குறித்து ஆரவ் பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் என்னவெல்லாம் கூறியிருக்கிறார் என்பது உங்கள் பார்வைக்கு
“முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது, இருப்பினும் எனக்கென்று ஒரு அறிமுகம் வேண்டும் என்பதற்காக பிக் பாஸில் கலந்துகொள்ள முடிவு செய்தேன்.

செல்வதற்கு முன் அனைத்தும் ஸ்கிப்ட் படி நடக்கும் என்றே நினைத்து சென்றேன், ஆனால் அங்கு எதுவும் அப்படியில்லை. எங்கள் வேலைகள் அனைத்தையும் நாங்களே செய்தோம். எங்கள் துணியை நாங்களே துவைப்போம், வீடு கழுவி, பாத்திரம் கழுவி, சமைத்து முடித்து உறங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

பிக் பாசின் இறுதி நாட்களில் டாஸ்க்குகள் மிகவும் பயங்கரமாக இருந்தது. பிக் பாஸ் எங்களை ரொம்பவே சிரமப்படுத்தினார். எங்கள் பொறுமையை முடிந்த வரை சோதித்தனர். அதுவே அவர்கள் குறிக்கோளாக இருந்தது.

oviya saravana store danceஆனால் அதை எல்லாம் கடந்து இந்த வெற்றி கிடைத்ததை நான் ஆச்சர்யமாகவே பார்க்கிறேன். இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்காக பலர் போலியாக நடித்தனர். அதில் சுஜா வருணி ஒரு முக்கியமான ஆள். மக்களின் ஆதரவை பெறுவதற்காகவும், தன்னை பரிதாபமாக பார்க்க வேண்டும் என்பதற்காகவும் அவர் மிகவும் நல்லவர் போல நடித்தார். எனக்கு அதில் உடன்பாடில்லை. வாக்குகளுக்காக மக்களை ஏமாற்றுவதில் எனக்கு சுத்தமாக விருப்பமில்லை. நான் நானாகவே இருந்ததனால்தான் இந்த வெற்றி கிடைத்தது. எல்லா பிக் பாஸ் குடும்ப உறுப்பினர்களையும் பிரிவது மிகவும் வருத்தமளிக்கிறது.

ஓவியா மிகவும் பிரபலமான நடிகை, என்னுடைய சிறந்த தோழி, அவர் எப்போதும் அவராகவே இருப்பார், போலியாக ஒருபோதும் நடித்ததில்லை. ஆனால் பல நேரங்களில் குடும்பத்தினருடன் ஒத்துப்போகாமல் பிடிவாதம் செய்திருக்கிறார். அதனாலேயே மற்றவர்கள் ஓவியாவை விலக்கினார்கள். நான் ஓவியாவுடன் நெருக்கனான தோழனாக இருந்தேன், அவர் ஒரு பேன், அவரின் பெயர் கெட்டுப்போகமால் இருக்கவே நான் பல விசயங்களை வெளியில் சொல்லவில்லை. ஆனால் அந்த மருத்துவ முத்தம் உட்பட பல விஷயங்கள் வெளியேறி எங்கள் இருவருக்கும் அவப்பெயர் ஏற்பட்டது.

பிக் பாஸில் இருந்த மற்றவர்களை காட்டிலும் ஒவியாதான் மிகவும் நல்லவர். ஓவியா விஷயத்தை நான் சரியாக கையாண்டிருக்கலாம், அவரை நான் புறக்கணிக்காமல் இருந்திருந்தால் ஓவியா கட்டாயம் பிக் பாசின் வெற்றியாளராய் இருந்திருப்பார். நான் அவரை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்தியதற்கு மிகவும் வருத்தப்படுகிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top