பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது.

இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 ஜூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுப்புரை ஆற்றி நடத்துகிறார்.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்தி நிகழ்ச்சியான பிக் பாசை அடிப்படையாகக் கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ இது ஜான் டி மோல் என்பவரால் உருவாக்கப்பட்டது. இது டச்சு பிக் பிரதர் வடிவத்தை முலமாகக் கொண்டது.

இதில் போட்டியாளர்கள் இந்த நோக்கத்திற்காகக் கட்டப்பட்ட வீட்டில் வாழ்கின்றனர், மேலும் இவர்கள் உலகின் பிற தொடர்பிலிருந்து இருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு வாரமும், வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கு, ஒவ்வொருவரும் அவர்களுடன் குடியிருக்கும் சகப் போட்டியாளர்கள் இருவரைத் பரிந்துரைப்பார்கள்.

இவ்வாறு வெளியேற்றுவதற்கு அவர்களுக்குள் ஒரு பொது வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டிவரும்.இதில் பரிந்துரைக்கப்பட்டவர்களில் வெளியேறும் ஒருவரை மக்கள் ஓட்டு தீர்மானிக்கும். இறுதி வாரத்தில், வீட்டில் மீதமிருக்கும் நபரில், யார் வெற்றியாளர் என்பதைப் பொதுமக்களின் வாக்களிப்புக்கு விடப்படும். பிற பிக் பிரதர் நிகழ்ச்சிகளைப் போலன்றி, இந்தியப் பதிப்பானது வீட்டில் தங்க, பிரபலங்களைப் பயன்படுத்துகிறது, பொது மக்களிலிருந்து யாரையும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதில்லை.

பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள். அவர்களில் யார் வெற்றியாளர் என்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மேலும், நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறியவர்கள் அனைவருமே இறுதிப் போட்டியாளர்களைக் காண வீட்டுக்குள் அனுப்பப்பட்டார்கள். அதில் ஸ்ரீ மற்றும் நமீதா இருவரும் கலந்து கொள்ளவில்லை. பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற ஓவியா “ஹாய் ஆரவ், எப்படி இருக்க.. நீ ரொம்ப உடல் மெலிந்து விட்டாய்” என்று மட்டுமே பேசினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலம் வருகின்றன.பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடந்து முடிந்துவிட்டது. மருத்துவ முத்தம் புகழ் ஆரவ் பிக் பாஸ் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.இந்நிலையில் பிக் பாஸ் மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரச் சொன்னால் போட்டியாளர்களின் ரியாக்ஷன்

விட்றா விட்றா என்ன இருந்தாலும் அவன் நம்ப பையன் டா…
#OviyaArmy #BiggBossTamil #BigBossTamil #BiggBoss #VivoBiggBoss #பிக்பாஸ்

மருத்துவ முத்தம்#aarav #aaravoviya #biggbosstamil #BigBossTamil

கோலம் போட்டு, சமைக்க, பாத்திரம் வெளக்கனு உன்னய நூறுநாள் வேலைக்கு வைச்சு இருந்துருக்காரு பிக்பாஸ்