Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே ஓவரில் 26 ரன்கள் அடித்த ஆஸ்திரேலியாவின் ஆரன் ஃபிஞ்ச்

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 3 டி-20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டி-20 போட்டி சிட்னியில் இன்று நடந்தது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் (43*) அதிரடியாக ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் அணி, 12.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்திருந்த போது , மழை குறுக்கிட்டது. இதையடுத்து போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மழை நின்ற பின் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. மழை நின்ற பின் பாகிஸ்தான் அணி 15 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்தது.

டார்கெட் 119 ஆக நிர்ணயிக்கப்பட்டது. டேவிட் வார்னர், ஃபிஞ்ச் சிறப்பான துவக்கம் அளித்தனர்.  ஃபிஞ்ச் 16 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 37 ரன்கள் விளாசினார். ஆஸ்திரேலிய அணி 3.1 ஓவரில் 41 ரன்கள் எடுத்த போது, மீண்டும் மழை குறுக்கிட, போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதில் பாகிஸ்தானின் முகம்மது இர்பான் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீசினார். அதில் ஃபிஞ்ச் 26 ரன்கள் (6 4 4Nb 6 0 4 1 ) விளாசினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top