Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆண்பாவம் படத்தை ரீமேக் செய்ய துடிக்கும் வாரிசு நடிகர்.. நல்ல படத்தை நாசமாக்க போறாங்க!
தமிழ் சினிமாவில் உயரத்திற்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபித்து காட்டியவர் பாண்டியராஜன். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் இயக்குனராக மாறி நடிகராகவும் கலக்கியவர்.
பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் கன்னி ராசி. பிரபு, ரேவதி ஆகியோர் நடித்திருந்த அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து பாண்டியராஜன் இயக்கிய இரண்டாவது படத்திலேயே இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார்.
1985ம் ஆண்டு பாண்டியன் மற்றும் பாண்டியராஜன் இருவரும் இணைந்து நடித்த ஆண்பாவம் படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. ஆண்பாவம் படத்தின் வெற்றி பாண்டியராஜனுக்கு வேற லெவல் வரவேற்பை கொடுத்தது.
இன்றும் ஆண்பாவம் படத்தை ரசிக்கும் ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. எப்போது பார்த்தாலும் அலுக்காத படத்தை எடுத்த பெருமை பாண்டியராஜனுக்கே சேரும். அதன்பிறகு பாண்டியராஜன் பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பாண்டியராஜன் நடித்த ஆண்பாவம் படத்தின் ரீமேக்கில் நடிக்க பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் ஆர்வம் காட்டி கொண்டிருக்கிறாராம். பாண்டியன் கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலினும், பாண்டியராஜன் கதாபாத்திரத்தில் சந்தானத்தையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம்.

sandhanam-udhayanidhi
இதைக் கேள்விப்பட்ட கோலிவுட் வாசிகள் தயவு செய்து பழைய சூப்பர் ஹிட் படங்களை ரீமேக் செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என ஆர்டர் போடும் அளவுக்கு வெறுப்பாகி விட்டார்களாம். ஏற்கனவே ரீமேக் என்ற பெயரில் பல படங்களை கொலை செய்தனர் என்பதும் ஒரு காரணம்.
