Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆண்பாவம் படத்தை ரீமேக் செய்யப் போகும் பிரபல நடிகர்.. சத்தியமா சொல்றேன், செட்டாகாது விட்ருங்க!
1985 ஆம் ஆண்டு இயக்குனர் மற்றும் நடிகர் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ஆண் பாவம். அண்ணன் தம்பி கதாபாத்திரத்தில் பாண்டியராஜனும் நடிகர் பாண்டியனும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.
அதிலும் முக்கியமாக இருவரின் தகப்பனாராக நடித்த விகே ராமசாமியின் கதாபாத்திரமும் இவர்களுக்கு இணையாக பேசப்பட்டது. அறிமுக நடிகைகளாக ரேவதி மற்றும் சீதா ஆகியோரும் படத்திற்கு பெரிய பலம்.
அதுமட்டுமல்லாமல் பாண்டியராஜனின் பாட்டி, காமெடியனாக ஜனகராஜன் ஒவ்வொரு கதாபாத்திரமும் எதார்த்தமாக அமைந்தது. இளையராஜாவின் இசையில் உருவான ஒவ்வொரு பாடலும் இன்று கேட்டாலும் கேட்க அமிர்தமாக இருக்கும்.
அப்பேர்பட்ட சூப்பர் ஹிட் படத்தை தற்போது பிரபல நடிகரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான சசிகுமார் ரீமேக் உரிமையை வாங்கி நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த வகையில் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தை தொடர்ந்து பாண்டியராஜனின் ஆண்பாவம் படத்திற்கும் பிளான் போட்டுள்ளாராம்.
அனேகமாக சுப்பிரமணியபுரம் சசிகுமார் மற்றும் ஜெய் ஆகியோரின் கூட்டணியில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த வகையில் பாண்டியன் கதாபாத்திரத்தில் சசிகுமாரும், பாண்டியராஜன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய்யும் நடிக்க இருக்கிறார்களாம். மேலும் விகே ராமசாமி கதாபாத்திரத்தில் பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தம் தேர்வாகியுள்ளாராம்.
சமீபத்தில் பாண்டியராஜன் மகன் பிருத்வி ஆண்பாவம் படத்தை ரீமேக் செய்வதில் உடன்பாடு இல்லை எனக் கூறியிருந்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என சசிகுமாருக்கு சம்பந்தப்பட்ட வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளன. இது உண்மையா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
