Connect with us
Cinemapettai

Cinemapettai

Reviews | விமர்சனங்கள்

ஆண் தேவதை திரைவிமர்சனம்.! | Aan Devathai Movie Review

ஆண் தேவதை திரைவிமர்சனம்.!

பொதுவாக ஒரு சில நல்ல படங்களை, பத்திரிகையாளர்களுக்கும் நண்பர்களுக்கும் திரையுலக பிரபலங்களும் முன்கூட்டியே சிறப்பு காட்சி ஒன்று திரையிடப்படும், இந்த சிறப்புத் திரைக்காட்சி படம் ரிலீஸாவதற்கு முன்பு படத்தின் நல்ல கருத்து மக்களிடம் சேர வேண்டும் என்பதற்காக தான், அப்படித்தான் இந்த ஆண் தேவதை திரைப்படம் மூன்று நாட்களுக்கு முன்பே சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

ஆண் தேவதை திரைப்படத்தை மூன்று நாட்களுக்கு முன்பு சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது ஆனால் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அந்தச் செய்தியைப் பற்றி எதுவும் போடாததால் வருந்துகிறோம்.

ரெட்டச்சுழி படத்தை தொடர்ந்து இயக்குனர் தாமிரா டைரக்சனில் உருவாகியுள்ள படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடித்துள்ள இந்தப்படத்தை தனது ‘சிகரம் சினிமாஸ்’ நிறுவனத்துடன் ஃபக்ருதீன் என்பவருடன் இணைந்து தயாரித்துள்ளார் தாமிரா. விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம் என முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இந்தப்படத்தில் பணிபுரிந்துள்ளனர் ஆண் தேவதை வெற்றி பெற்றாரா இல்லையா என பார்க்கலாம்..

இந்த வருடத்தில் நல்ல படம் குடும்ப படம் என்ற வரிசையில் கண்டிப்பாக ஆண் தேவதை திரைப்படம் இடம்பெறும் படத்தின் முதலிலேயே சோகமான காட்சி, சோகமான மியூசிக் இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது படம் எப்படி போகும் என்பதை ஈஸியாக கணித்து விடலாம்.

சமுத்திரகனி ஒரு மெடிக்கல் ரிப்பாக இருக்கிறார், அனாதையாக இருக்கும் கதாநாயகிக்கு ஆதரவு கொடுத்து திருமணம் செய்து கொள்கிறார் கதாநாயகன் சமுத்திரக்கனி, இவர்களின் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருக்கிறது இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள், அதன் பிறகு தான் குடும்பத்தில் வெடிக்கிறது பிரச்சனை. இவர்கள் இருவரின் வாழ்க்கையில் காலையில் எழுந்தவுடன் வேளை குழந்தைகளுக்கு சாப்பாடு பிறகு அலுவலகத்தில் வேலை, என சுமூகமாக ஓடிக்கொண்டிருந்த குடும்ப வாழ்க்கை.

சமுத்திரகனி மெடிக்கல் ரெப்பாக இருக்கிறார் ஆனால் கதாநாயகியோ ஐடி கம்பெனியில் பணிபுரிகிறார், இப்படி ஏற்றத்தாழ்வுடன் வேலை பார்க்கிறார்கள்,கதாநாயகிக்கு இன்னும் மேலே மேலே சம்பாதிக்கவேண்டும் கார் வீடு என ஆடம்பரமாக வாழ வேண்டும் என ஆசை. ஒரு கட்டத்தில் குழந்தைகளைப் பார்ப்பது யார், பள்ளியிலிருந்து அழைத்து வருவது யார், குழந்தைகளைக் கூட பார்த்துக் கொள்ள முடியாமல் அப்படி என்ன வேலை என வேலையை விட்டு விடுகிறார் சமுத்திரக்கனி சுமுகமாக போய்கொண்டிருந்த குடும்பம் அலுவலக பிரச்சனையால், இவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது.

கதாநாயகியோ அலுவலகத்தில் இருக்கும்  ஆடம்பர மனிதர்களைப் பார்த்து அதே போல் நாமும் வாழ வேண்டும் என கிரெடிட் கார்ட், ஹோம் லோன் பர்சனல் லோன், என அனைத்திலும் கமிட்மெண்ட் ஆகிறார் இதனால் ஒரு காலகட்டத்தில் இவர்கள் இருவரும் பிரிகிறார்கள் அதன் பின்பு எப்படி செய்கிறார்கள் என்பதுதான் மீதி கதை.

படத்தில் சமுத்திரக்கனிக்கு குழந்தையாக நடித்திருக்கும் பெண் குழந்தை ஏற்கனவே  வெப் சீரியலில் நடித்து வந்துள்ளார் அதனால் அவரின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது, மற்றொரு குழந்தையின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்து விட்டது, படத்தின் கதையை தாங்கிப் பிடிப்பது ஜிப்ரானின் இசை தான், சமுத்திரகனி அவரின் கதாபாத்திரத்தில் சோகமான காட்சிகளிலும் அற்புதமாக நடித்துள்ளார்.ஆனால் இவர் சொல்ல வரும் கருத்தை அறிவுரை சொல்வது போல் சொல்வதை கண்டிப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும் ஏனென்றால் பல ரசிகர்களிடம் அய்யயோ வந்துட்டார் என்ன புலம்ப வைத்து விடும்.

படத்தில் காமெடி நடிகர் இல்லாதது ஒருமையாக மைனசாக தெரிகிறது என்னதான் சமுத்திரக்கனி காமெடி செய்தாலும் அது காமெடியாக எடுத்துக்கொள்ள முடியவில்லை .ஒளிப்பதிவாளர் தனது வேலையை அற்புதமாக செய்துள்ளார், விஜய் சேதுபதியின் 96 திரைப்படம் வெளியாகி பலரின் கடந்த கால  வாழ்க்கையை நினைவுக்கு கொண்டு வந்தது படம் ஆகா ஓகோ என பேசவைத்தது  அதேபோல் இந்த ஆண் தேவதை திரைப்படமும் பலரின் வாழ்க்கையை தன் கண் முன்னே கொண்டு வரும், இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு  பலரின் குடும்ப வாழ்க்கைக்கு விடிவு காலம் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மனிதர்களின் வாழ்க்கையில் அலுவலக வேலை, திருமண வாழ்க்கை, குழந்தைகளை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும் பெண்களின் அலுவலக வேலை இவை அனைத்திற்கும் ஒரு முடிவு வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்பதை அழகாக காட்டி உள்ளார்கள் படத்தில், படத்தை கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டும் அப்பொழுது தான் பலரின் வாழ்க்கைக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.
.
ஆண் தேவதை : 3/5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top