பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் தங்கல் படம் சாதனையின் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் சீனாவிலும் வெளியாகிய இந்த படம் தற்போது ரூ 2000 கோடி வசூலை நெருங்கிவருகிறது.

ஏற்கனவே ராஜமௌலியின் பாகுபலி வெளியாகி வசூல் சாதனை செய்த நிலையில், இதையும் தாண்டி தங்கல் முதலிடத்தை பிடித்து விட்டது. விரைவில் பாகுபலியும் இதை தொடலாம்.

இந்நிலையில் அமீர்கான் அடுத்தாக விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இருக்கிறார். அவருடைய பேனரின் கீழ் இப்படத்தை வெளியிடுகிறாராம்.

மேலும் தற்போது அவர் நடித்து வரும் secret super star, thugs of hindustan படங்களை தொடர்ந்து இவர் அந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.