சூர்யா குடும்பத்தை பகைச்சுக்கிட்டதால் சட்ட சிக்கலில் மாட்டிய அமீர்.. வெளிய வர முடியாத அளவுக்கு போட்ட கிடுக்கு பிடி

Director Ameer: கடந்த வருடம் அமீர் மற்றும் சூர்யா குடும்பத்திற்கு இடையேயான மனக்கசப்பு தான் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து பருத்திவீரன் பஞ்சாயத்து பூதாகரமாக வெடித்தது.

சில வாரங்களிலேயே அமீர் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அதை அடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இயக்குனர் அமீர் மீது அதிகாரிகளின் பார்வை திரும்பியது. இதனால் அமீர் டெல்லியில் விசாரணைக்காக ஆஜரானார்.

ஆனால் மீண்டும் அவர் விசாரணைக்கு வர வேண்டும் என அமலாக்கத் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் தற்போது அவருடைய அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சூர்யா குடும்பம் விட்ட சாபம்

அதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சோதனையின் முடிவில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது அமீர் வெளிவர முடியாத அளவுக்கு பிரச்சனையாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது. பருத்திவீரன் பஞ்சாயத்தில் இவருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த திரையுலகமும் திரண்டது.

ஆனால் தற்போது இப்படி ஒரு வழக்கில் அவர் சிக்கிய நிலையில் அத்தனை பேரும் மௌன சாமியார் ஆகிவிட்டனர். ஒரு விதத்தில் சூர்யா குடும்பம் விட்ட சாபமாக கூட இது இருக்கலாம்.

எது எப்படி இருந்தாலும் அமீர் இப்போது மிகப்பெரும் நெருக்கடியில் தான் சிக்கியிருக்கிறார். அமலாக்க துறையினரின் கிடுக்குப் பிடியில் மாட்டி இருக்கும் இவர் இந்த வழக்கிலிருந்து மீள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

- Advertisement -