வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

புது பைக்கில் கெத்தாக சென்ற ஆல்யா! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த வைரல் வீடியோ

சித்து மற்றும் ஆலியா மானசா நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் ராஜா ராணி-2. திருமணமான பெண் தன் லட்சியத்தை அடைய போராடும் கதையே இந்த சீரியல். நடிகை ஆலியா மானசா ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர், நடிகைகளுடன் நடனமாடுவது போன்ற வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது வெளியிடுவார். தற்பொழுது ஆலியா பைக் ஓட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ராஜாராணி-2 வின் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகரான சித்துவை தன் பைக்கின் பின்னே ஏற்றிக் கொண்டு செல்வது போன்ற வீடியோ தான் அது. வண்டியை ஸ்டார்ட் செய்ய ஆரம்பத்தில் தடுமாறிய ஆலியாவை கண்டு சற்று ஜெர்க் ஆகிறார் சித்து.

அதற்கு ஆலியா, சித்துவை பார்த்து நீங்கள் குண்டாக இருப்பதால் தான் சற்று சிரமமாக உள்ளது என்று சமாளித்து வண்டியை ஓட்டிச் செல்கிறார். இந்த வீடியோ பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது. மேலும் குழந்தை பிறந்த பிறகு தன்னுடைய உடல் எடையை குறைத்த ஆல்யா தற்போது நடிப்பு, நடனம் என்று படு பிசியாக உள்ளார்.

தன் குழந்தையுடன் அவர் செய்யும் குழந்தைத்தனமான சேட்டைகளும் சமூக வலைத்தளங்களில் ரொம்பவே பிரபலம். வரிசையில் தற்போது ஆலியா மாஸாக பைக் ஓட்டும் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.

விஜய் டிவியின் முக்கியமான டிஆர்பி ஏற்றும் இந்த சீரியலில் ஆல்யாவுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சில மாதங்கள் இடைவெளிக்குப் பின் வந்த ஆல்யாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பைக் ரைடிங் தவிர சிலம்பம் தற்காப்பு கலை என பல வித்தைகளை கற்றுள்ளார் ஆல்யா என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News