பிரசவத்திற்கு பின் சீரியலை விட்டு விலக போகிறீர்களா? ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஆலியா மானசா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பிரபலமாக இருப்பது ராஜா ராணி 2 சீரியல். ராஜா ராணி முதல் பாகத்தில் நடித்த ஆல்யா மானசா இந்த சீரியலில் நடிகர் சித்துவுடன் இணைந்து நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆல்யா ராஜா ராணி சீரியலில் நடிக்கும்போது சக நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஐலா என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறது. பிரசவத்திற்குப் பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க வந்துள்ள ஆல்யா மானசா தற்போது இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் இந்த செய்தியை ரசிகர்களுக்கு அறிவித்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் ராஜா ராணி 2 சீரியலில் தொடர்ந்து நடிப்பீர்களா என்று ஆல்யாவை கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர் நான் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினார். தற்போது அவர் ஏழு மாத கர்ப்பத்துடன் சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார். விரைவில் அவருக்கு குழந்தை பிறக்க இருப்பதால் அவர் சீரியலில் இருந்து விலக இருப்பதாக செய்திகள் வெளியானது.

இதுகுறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஆலியா மானசா சுவாரசியமான பதிலை அளித்துள்ளார். ராஜா ராணி 2 சீரியலில் இருந்து நீங்கள் விலக போகிறீர்களா என்று ஒரு ரசிகர் கேட்டார். அதற்கு ஆல்யா இதுவரை எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ஒரே ஒரு சந்தியா தான் அது இந்த ஆல்யா மட்டும்தான் என்று கலகலப்பாக பதிலளித்துள்ளார். இதனால் அவரின் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வரும் பரினா குழந்தை பிறக்கும் கடைசி மாதம் வரையில் அந்த சீரியலில் நடித்தார்.

பிரசவத்திற்கு பின்னர் சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு அவர் திரும்பவும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இதேபோன்று ஆல்யாவும் இந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க முடிவெடுத்துள்ளார்.