வாய்விட்டு மாட்டிக்கொண்ட கவர்ச்சி கன்னி.. சுத்தி சுத்தி வரும் தமிழ் ஹீரோக்கள்

பாகுபலி என்ற சாதனை திரைப்படத்தின் மூலம் உலக அளவில் புகழ் பெற்றுள்ளார் இயக்குனர் ராஜமௌலி. அடுத்ததாக அவர் இயக்கியுள்ள திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்த படம் அவரின் முந்தைய படத்துக்கு இருந்ததைவிட அதிக அளவு ஆர்வமும், எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்து வருகிறது.

இந்தப் படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோக்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராம்சரன் ஏற்கனவே ராஜமௌலி இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற மகதீரா என்ற வரலாற்று படத்தில் நடித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து இந்த ஆர் ஆர் ஆர் படத்தில் பாலிவுட் பிரபலங்களான அஜய் தேவ்கன், நடிகை ஆலியா பட் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த அளவுக்கு ட்ரைலர் மிகவும் மிரட்டலாக இருந்தது.

வரும் ஜனவரியில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் தற்போது படக்குழு பிஸியாக இருக்கிறது. இந்த படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்ட நடிகை ஆலியா பட் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வத்துடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும் தமிழ் படங்களில் நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே பாலிவுட் நடிகைகளை தங்கள் படங்களில் ஹீரோயினாக நடிக்க வைக்க தமிழ் நடிகர்கள் பலரும் முயற்சி செய்கின்றனர். அதனால் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட 2, 3 நடிகர்கள் ஆலியா பட்டுக்கு தூது விட்டிருக்கின்றனர்.

ஆனால் நடிகை தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லையாம். மேலும் ஆலியா பட் தான் நடிக்கும் படங்களில் வரும் க்ளோஸ் அப் காட்சிகளுக்கு பெரும்பாலும் டூப் தான் பயன்படுத்துவார் என்பது கூடுதல் தகவல். பல நடிகர்களும் ஆல்யாவை தமிழில் நடிக்க வைக்க முயற்சி செய்வதால் விரைவில் நம் தமிழ் படங்களில் ஆல்யாவை ஹீரோயினாக காணலாம்.