Tamil Cinema News | சினிமா செய்திகள்
ராஜாவாக வைபவ், பூதமாக முனீஸ்காந்த்.. ஹாலிவுட் அலாதீன் ஸ்டைலில் வெளியான ஆலம்பனா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான வைபவ் ரெட்டி தற்போது கவனிக்கப்படும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் மினிமம் பட்ஜெட் நாயகனாகவும் கலக்கி வருக்கிறார்.
எதார்த்தமான நடிப்பில் அனைவரையும் கவர்ந்துள்ள வைபவ் ரெட்டி நடிப்பில் கடைசியாக வெளியான லாக்கப் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும்பாலும் வைபவ் நடிக்கும் படங்கள் முதலுக்கு மோசம் இல்லை எனும் அளவுக்கு நன்றாகவே ஓடி வருகிறதாம்.
அந்த வகையில் அடுத்ததாக வைபவ் நடிப்பில் காட்டேரி என்ற படம் வெளியாக உள்ளது. கடந்த வருட இறுதியில் தியேட்டர்களில் வெளியாக இருந்த இந்த திரைப்படம் தற்போது ரிலீஸாக முடியாமல் தடுமாறி வருகிறது.
அதனைத் தொடர்ந்து அடுத்ததாக வைபவ் நடிப்பில் ஆலம்பனா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. அதில் ராஜா கெட்டப்பில் வைபவ் மற்றும் பூதம் கெட்டப்பில் முனிஸ்காந்த் உள்ள போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

aalambana-cinemapettai
மேலும் ஹாலிவுட்டில் வெளியான அலாவுதீன் என்ற படத்தின் சாயலில் அமைந்துள்ள ஆலம்பனா படத்தை பாரி k விஜய் என்பவர் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள ஆலம்பனா திரைப்படம் சம்மரில் குழந்தைகளை தியேட்டரில் மகிழ்விக்கும் படமாக இருக்கும் என இப்போதே சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
