லால் சலாம்- எதிர்த்து நின்னு வீரச்சாவு சாகுறது ஆயிரம் மடங்கு மேல்.. ரத்த சாட்சி விமர்சனம்

ஆஹா தமிழ் மற்றும் மகிழ் மன்றம் தயாரிப்பில் ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் நேரடி ஓடிடி ரிலீசாக கடந்த 9 ஆம் தேதி வெளியான படம் ‘ரத்த சாட்சி’ . ஜெயமோகனின் ‘கைதிகள்’ கதையை படமாக்கியுள்ளார் இயக்குனர். மணிரத்னம், வெற்றி மாறன் போன்ற ஜாம்பவான்கள் படமாக்க ஆசைப்பட்ட கதை. இதனை இயக்குனர் இஸ்மாயில் எப்படி படமாக்கியுள்ளார் என வாங்க பார்ப்போம்.

இப்படம் பீரியட் அரசியல் ட்ராமா ஜானர். கம்யூனிஸ்ட் சிந்தனைகளின் மீது நம்பிக்கை வைத்துள்ள அப்பு கதாபாத்திரத்தில் கண்ணா ரவி நடித்துள்ளார். கரும்பு காட்டில்  நடக்கும் அநீதிக்கு எதிராக இவர் மக்களை சிந்திக்க தூண்டுகிறார், அது கலவரத்தில் முடிகிறது; போலீஸ் தேடுகின்றனர்.

Also Read: மனிதனே மனிதனை அசிங்கப்படுத்தும் உலகம் இது.. சாதிகள் உள்ளதடி பாப்பா விட்னெஸ் விமர்சனம்

நக்சல்களை பிடிக்க தனி டீம் அமைக்கப்படுகிறது. நாயகன் வேறு இடத்தில தஞ்சம் புகுகிறார். அங்கும் சாராயம் காய்ச்சி பிழைக்கும் மக்களுக்காக போராடுகிறார். இந்நிலையில் நாயகனின் நண்பன் போலீஸ் விசாரணையில் இறக்க, அந்த ஆஃபீஸரை கொன்று விடுகிறான் அப்பு.

போலீஸ் டாஸ்க் போர்ஸ் இவரை தேட, மனிதர் காட்டில் தஞ்சம் புகுகிறார். பின்னர் தனது செயல்கள் அடுத்தவருக்கு தரும் துயரை கண்டு போலீசில் சரண் அடைகிறார். போலீஸ் இவர் கதையை முடிக்கிறது.

Also Read: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் வடிவேலுவுக்கு ஒர்க்கவுட் ஆகுமா, ஆகாதா.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

நாயகன் ஒருபுறமெனில் மறுபுறம் கான்ஸ்டபிள் ரோலில் இளங்கோ குமாரவேல் முக்கிய கதாபாத்திரம். தான் பார்க்கும் வேலை காரணமாக, நியாயம் இல்லாத செயல்களை செய்வதற்கு தயங்கும் கதாபாத்திரம்.

கேம்பில் போலீஸ் படம் பாடு, உயர் அதிகாரிகளின் மெத்தன போக்கு என பல விஷயங்கள் உள்ளது இந்த திரைக்கதையில். இரண்டு முக்கிய கதாபாத்திரங்களும் சந்திக்கும் சூழல் நம்மையும் பதைபதைக்க வைக்கிறது. அதிக பட்ஜெட் இன்றி தாங்கள் சொல்ல வந்த கருத்தை ஆழமாக பதிவு செய்துள்ளனர் இந்த படக்குழு.

Also Read: விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி எப்படி இருக்கு.. விறுவிறுப்பாக வெளிவந்த டுவிட்டர் விமர்சனம்

சினிமாபேட்டை ரேட்டிங் 3 / 5