2011 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் இரண்டாவது முறையாக வெளியான திரைப்படம் தான் ஆடுகளம். பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் முதல் பாதி அருமையாக இருந்ததாகவும் இரண்டாவது பாதி சொதப்பியதாகவும் அப்போதே விமர்சனங்கள் வெளியானது.
இதை வெற்றிமாறன் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆடுகளம் படத்திற்கு முதன் முதலில் வைக்கப்பட்ட டைட்டில் வேறு என அவர் சமீபத்திய யூடியூப் சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் தமிழ் சினிமாவில் தனுஷ் மார்கெட் பெரிய அளவுக்கு உயரத்தில் இருப்பதற்கு முக்கிய காரணமே வெற்றிமாறன் தான். வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படங்கள் மட்டுமே தனுஷுக்கு மிகப்பெரிய வசூலை பெற்று கொடுத்திருக்கிறது.
வெற்றிமாறன் இல்லாத தனுஷ் படங்கள் பீஸ் இல்லாத பிரியாணி போல சப் என்று தான் இருக்கிறது. வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் இதுவரை மொத்தம் நான்கு படங்கள் வெளியாகியுள்ளன. நான்குமே சூப்பர் டூப்பர் வெற்றிதான்.
அதுவும் கடைசியாக வெளிவந்த அசுரன் திரைப்படம் கிட்டதட்ட 100 கோடி வசூல் சாதனை செய்தது. இந்நிலையில் ஆடுகளம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து வெற்றிமாறன் சமீபத்தில் பிரபல சேனல் ஒன்று பேட்டி கொடுத்தார்.

அதில் முதல் முதலில் ஆடுகளம் படத்திற்கு வைக்கப்பட்ட டைட்டில் சண்டக்கோழி தான். ஆனால் அதற்கு சில வருடங்களுக்கு முன்புதான் லிங்குசாமி சண்டக்கோழி என்ற பெயரில் மிகப்பெரிய வெற்றிப் படத்தை கொடுத்ததால் அந்த டைட்டிலை கருத்தில் கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.