Tamil Cinema News | சினிமா செய்திகள்
தன் படத்திற்கு ஹரியின் பிளாப் பட டைட்டிலை வைக்க ஆசைப்பட்ட வெற்றிமாறன்! சுவாரஸ்ய செய்தி
2011 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் இரண்டாவது முறையாக வெளியான திரைப்படம் தான் ஆடுகளம். பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் முதல் பாதி அருமையாக இருந்ததாகவும் இரண்டாவது பாதி சொதப்பியதாகவும் பலராலும் சொல்லப்பட்டது. எனினும் இப்படம் தேசிய விருது அறிவிக்கப்பட்ட பின்பு அனைவரும் பாராட்டியதும், கொண்டாடியதும் நாம் அறிந்தது தான். இப்படம் வெளியாகி சமீபத்தில் 10 ஆண்டுகள் நிறைவடைந்தது. சமூகவலைத்தளங்களில் அனைவரும் ஹாஷ்டாக் இட்டு கொண்டாடினர்.
மேலும் இயக்குனர் வெற்றிமாறன் பிரபல நாளிதழின் யூடியூப் சேனலுக்கு பிரேத்தியேக பேட்டியும் கொடுத்தார். அப்பொழுது ஆடுகளம் படம் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்தார்.
முதன் முதலில் ஆடுகளம் படத்திற்கு வைக்கப்பட்ட டைட்டில் சண்டக்கோழி தானாம். ஆனால் அதற்கு சில வருடங்களுக்கு முன்புதான் லிங்குசாமி சண்டக்கோழி என்ற பெயரில் மிகப்பெரிய வெற்றிப் படத்தை கொடுத்ததால் அந்த டைட்டிலை வைக்க முடியவில்லையாம்.
மேலும் அடுத்ததாக சேவல் என்ற டைட்டிலை பதிவு செய்ய சென்றுள்ளார். இயக்குனர் ஹரி அந்த தலைப்பை பதிவு செய்து விட்டதாக சொல்லியுள்ளனர். எனவே ஹரியை தொடர்பு கொண்டு டைட்டில் தரமுடியுமா என பேசியுள்ளார் வெற்றி. கோவிலில் வைத்து பூஜை செய்து விட்டேன் என் இயக்குனர் ஹரி சொன்ன பின்புது தான் வேற தலைப்பை தேடியுள்ளனர். (பரத்- பூனம் பாஜ்வா நடிப்பில் சேவல் படம் 2008 இல் வெளியானது.)

seval
பின்னர் தான் களம் என்ற தலைப்பை முதலில் யோசித்து பின்னர் ஆடுகளம் என முடிவு செய்துள்ளனர்.
