Tamil Cinema News | சினிமா செய்திகள்
விவேக்கிற்கு ஹிப் ஹாப் ஆதி கொடுத்த பொங்கல் பரிசு..
ஆதி தனி பாடல்கள் வாயிலாக பரபலமாகி சினிமா இசை, ஹீரோ என தடம் பதித்தவர். இவர் நடிப்பில் வெளியான முதல் படம் மீசையை முறுக்கு. வாழ்க்கையை கற்பனை கலந்து நம் கண் முன்னே காட்டியது. படத்தில் ஆதி மற்றும் விவேக்கின் கெமிஸ்ட்ரி அப்பொழுதைய ட்ரெண்டிங் சமாச்சாரம். வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக பார்ப்பது, தன் மகனின் எதிர்காலம் மீது அக்கறையாக இருப்பது என்று கெத்தாக மீசையை முறிக்கியிருப்பார் விவேக்.
பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து, கூடவே இனிப்பும் அனுப்பியுள்ளார் ஆதி. தன் ட்விட்டரி பக்கத்தில் விவேக் பதிவிட்டுள்ளார்.
அன்பு @hiphoptamizha ஆதி! நீ அனுப்பிய பொங்கல் இனிப்பும் வாழ்த்தும் கிடைத்தது! நீ சிரித்து நான் சிரித்து அனைவரும் சிரித்து மகிழ்ந்து கொண்டாடுவோம் பொங்கலை!! Letz spread love n peace!! pic.twitter.com/M4P3NEkv3w
— Vivekh actor (@Actor_Vivek) January 14, 2020
