Reviews | விமர்சனங்கள்
சோதனை டு சாதனை.. ஆதியின் க்ளாப் விமர்சனம்
ஆதி, ஆகான்ஷா சிங், முனீஸ்காந்த், மைம் கோபி, பிரகாஷ் ராஜ், கிரிஷா குரூப், நாசர் நடிப்பில் பிருத்வி ஆதித்யா இயக்கத்தில் சோனி லிவ் தளத்தில் நேரடி ஓடிடி ரிலீஸ் ஆகியுள்ள படம். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் இணைந்து எடுக்கப்பட்டுள்ள ஸ்போர்ட்ஸ் ட்ராமா படம்.
கதை: ஓட்டப்பந்தயத்தில் சாதிக்க நினைவுக்கும் மகன் ஆதி, உறுதுணையாக அப்பா பிரகாஷ் ராஜ். ஒரு விபத்தில் தனது கால் மற்றும் அப்பாவை இழக்கிறான் நாயகன், அவனது கனவுகள் தவிடு பொடி ஆகிறது. வாழ்வில் எந்த வித பிடிப்பும் இன்றி தனது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இளம் பெண் கிரிஷா குரூப்பை தேடி செல்கிறார். இங்கு சிட்டி அழைத்து வந்து அவளை வீராங்கனை ஆக்க முயல்கிறார். எனினும் அசோசியேஷன் தலைவர் நாசர் குறுக்கிட்டு தடுக்கிறார். ஆதி தானே கோச் ஆக மாறுகிறார்.
ஒருபுறம் ஆதியின் இந்த நிலைக்கு காரணம் யார், மனைவியுடன் ஏற்பட்ட விரிசல் ஏன் என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது, அதே நேரத்தில் பெயரை மாற்றுவது, சீனியர் வீராங்கனைகளுடன் மோதவைப்பது என திரைக்கதை சென்று முடிகிறது படம்.
சினிமாபேட்டை அலசல்: கனா, ஜீவா, எதிர் நீச்சல் போன்ற பல படங்களின் வரிசையில் இந்த படமும் இணைகிறது. எனினும் முந்தைய படங்களில் உள்ள பன்ச் இதில் மிஸ்ஸிங் என்றே சொல்ல தோன்றுகிறது. எளிதில் அடுத்த என்ன நடக்கும் என்பதனை நம்மால் யூகித்து விட முடிகிறது.
ஸ்போர்ட்ஸ் துறையில் உள்ள அரசியல் மற்றும் ஜாதி வேறுபாடு பற்றி நாம் ஏற்கனவே பல முறை திரையில் பார்த்துள்ளோம் என்பதால் இப்படத்தின் கதை நமக்கு புதியதல்ல. விபத்துக்கு பின் ஆதிக்கு இருக்கும் மனோ வியாதி, ஆதிகாரவர்க்கத்தின் பிடியில் அசிங்கப்படும் இளம் பெண் கதாபாத்திரம், ஆதி அவரது மனைவியின் உறவுச்சிக்கல் என அங்கங்கு இயக்குனரின் ஸ்பெஷல் டச்சை நாம் உணர முடிகிறது. இளையராஜா துள்ளல் இசையை நமக்கு கொடுத்துள்ளார்.
வீட்டில் அமர்ந்து ஹாயாக இப்படத்தை தாராளமாக ஒருமுறை பார்க்கலாம். எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை. எனினும் வீரர்கள் சந்திக்கும் பிரச்சனையை இன்னமும் ஆழமாக காமித்திருக்கலாம்.
சினிமாபேட்டை ரேட்டிங் 2.5 / 5
