Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திருமணம் செய்துகொண்ட ஆதி நிக்கி கல்ராணி.. சந்தோஷத்துடன் வெளியான புகைப்படம்

aadhi nikki galrani

ஆதி வல்லினம் யாகாவாராயினும் நாகாக்க போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை பிரபலமானார். அதன் பிறகு இவருக்கு ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் கதைகளில் சொதப்பியதால் இவருக்கு பெரிய அளவில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. தெலுங்கில் மற்ற நடிகர்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.

நிக்கி கல்ராணி டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதன்பிறகு கதாநாயகியாக பல படங்களில் நடித்தார். பின்பு கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் ஏற்று நடிக்க ஆரம்பித்தார்.

aadhi nikki galrani

aadhi nikki galrani

இவர்கள் இருவரும் இணைந்து மரகதநாணயம் எனும் படத்தில் நடித்தனர். அப்போது கவிதைகளாய் எனும் பாடல் இவர்கள் இருவரும் இணைந்து காதல் செய்வார்கள். அப்போதிலிருந்தே இவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இவர்கள் இருவரும் நண்பர்கள் என கூறி வந்தனர்.

aadhi nikki galrani

aadhi nikki galrani

ஆனால் சமீபத்தில் இவர்கள் இருவரும் தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நிச்சயதார்த்தத்தை செய்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகின. அதன் பிறகு தாங்கள் இருவரும் காதலித்ததாகவும் தற்போது திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறினார்.

aadhi nikki galrani

aadhi nikki galrani

தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. மேலும் பல பிரபலங்களும் இவர்களது திருமணத்திற்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். ஆதி நிக்கி கல்ராணியின் திருமணம் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

aadhi nikki galrani

aadhi nikki galrani

Continue Reading
To Top