இந்திய அளவில் விமானங்களில் பயணிப்பவர்களுக்கு, ஆதார் எண் விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது.

இதன்படி, நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், பயணிகளின் கை ரேகை ஸ்கேன் செய்து, பரிசோதிக்கப்படும். இதன்பிறகு, அவரின் ஆதார் எண் சரிபார்க்கப்பட்டு, விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்.

இதன்மூலமாக, போலி பாஸ்போர்ட் தயாரித்து, வெளிநாடு தப்பிச் செல்வது தடுக்கப்படும் என்றும், தீவிரவாதிகள் ஊடுருவல் நிகழ்வது சாத்தியமற்றதாகி விடும் என்றும் விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

அதிகம் படித்தவை:  உங்களுக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா..? மத்திய அரசு வைக்குது ஆப்பு : எவனுக்கும் கல்யாணம் ஆகாது!

இந்த திட்டம், தற்போது சோதனை ரீதியாக ஐதராபாத் விமான நிலையத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. விரைவில் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையித்திலும் அமலுக்கு வர உள்ளது.

அதிகம் படித்தவை:  ரஜினியின் 2.O ரிலீஸ்?

விமான டிக்கெட் உடன், ஆதார் அட்டை எடுத்துச் செல்லாவிட்டாலும், கைரேகை சரிபார்ப்பு மூலமாக, ஆதார் எண் அடையாளம் காணப்படுவது எளிதாகும். எனவே, பயணியின் விவரம் உறுதி செய்யப்பட்டு, அவர் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார் என்றும், விமானப் போக்குவரத்து அமைச்சக வட்டாரங்களில் கூறப்படுகிறது.