fbpx
Connect with us

Cinemapettai

மனிதர்களுக்கு மட்டுமல்ல இனி மாடுகளுக்கும் இது அவசியம் – மத்திய அரசு அதிரடி!

Cow_cinemapettai

மனிதர்களுக்கு மட்டுமல்ல இனி மாடுகளுக்கும் இது அவசியம் – மத்திய அரசு அதிரடி!

மாடுகளுக்கும் ஆதார் எண் போன்ற அடையாள எண் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.

பொதுமக்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்றும், அதன் மூலமாக தான் அரசின் நல திட்ட உதவிகளை பெற முடியும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து பிற திட்டங்களுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறி நடவடிக்கை எடுத்தது. இதனிடையே ஆதார் எண்ணை அனைத்து திட்டங்களுக்கும் கட்டாயமாக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், மாடுகளுக்கும் இனி ஆதார் எண் போன்ற ஒரு அடையாள எண் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. அதன் மூலம் உரிய நேரத்தில் மாடுகளுக்கான தடுப்பூசி, அறிவியல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று கூறியுள்ளது.

மேலும், இதன் மூலம் பசுக்கள் கடத்தப்படுவதை தடுக்கவும், பால் உற்பத்தியை கண்காணிக்கவும் முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து 12 இலக்க அடையாள எண்ணை உருவாக்க கால்நடை வளர்ப்பு துறை வல்லுநர்களை நியமித்துள்ளது. பின்னர் அடையாள அட்டை மாட்டின் காது மடலில் ஒட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, மத்திய அரசு டிஜிட்டல் இந்தியாவை நடைமுறைப்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளதால், நடப்பாண்டில் மட்டும் 88 மில்லியன் மாடுகளுக்கு அடையாள எண் வழங்கப்பட உள்ளது. அதற்காக ரூ.148 கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இந்த செயலில் ஒரு லட்சம் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top