fbpx
Connect with us

ஆதார் எதற்கும் கட்டாயமில்லை.. ஆனால் ஆதார் இருந்தாதான் வேலை நடக்கும்.. குழப்புறாங்களே

Politics | அரசியல்

ஆதார் எதற்கும் கட்டாயமில்லை.. ஆனால் ஆதார் இருந்தாதான் வேலை நடக்கும்.. குழப்புறாங்களே

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பல முக்கிய அம்சங்கள் குறித்து பலரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வரும் கூட்டத்தொடரில் முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்றத்தில் அனைவரின் முன்னிலையில் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் ஆதார் சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளார். அதில் எந்த ஒரு தனி நபருக்கும் எந்த திட்டத்திற்கும் ஆதார் எண்ணை வழங்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் கூறுகின்றனர். ஆனால் எதார்த்தத்தில் கண்டிப்பாக கேட்கின்றனர். இல்லை என்றால் நம்மளிடம் இல்லாத ஆவணங்கள் கேட்பார்கள்.

மேலும் 7000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவர்களை நேரடியாக நிரப்பும் பணியில் மத்திய அரசு இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி காலம் முடிவடைய உள்ளது. அந்த ஆட்சிக்காலத்தை ஆறு மாதத்திற்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் ஜூலை 3ம் தேதி முதல் அடுத்த ஆறு மாத காலத்துக்கு ஜம்மு காஷ்மீரில் ஆட்சி நீட்டிக்கப்படுகிறது என்று கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top