Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆடையில்லா அமலாபாலின் “ஆடை” பட பர்ஸ்ட் லுக் – பிரபல ஹாலிவுட் படத்தில் இருந்து எடுக்கப்பட்டதா ?

மேயாத மான் பட இயக்குனர் ரத்னகுமாரின் இரண்டாவது படம் ஆடை. முதல் படத்தில் இருந்து முற்றிலும் வித்யாசமான ஜானர் என்பது பலரும் அறிந்ததே. இப்படத்தின் கதையினை கேட்டு பிடித்து போகவே, நிவின் பாலியின் “காயம்குளம் கொச்சுண்ணி” பட வாய்ப்பை நழுவ விட்டதாகவும் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். (பிரியா ஆனந்துக்கு அந்த ரோல் சென்றது)

சென்ற வாரம் வெளியான படத்தின் முதல் லுக் போஸ்டர் ட்விட்டரில் செம்ம ட்ரெண்டிங் ஆனது. உடம்பில் துணி எதுவும் அணியாமல், வெறும் டிஸ்ஸு பேப்பர் உடலின் பகுதியை மறைப்பது போன்ற கெட் அப்பில் அமலா தோன்றினார். மேலும் கையில் கம்பி, பழிவாங்கும் க்ரோதம் என்று படத்தின் ஜானரை நமக்கு சொல்லும் படி இருந்தது அந்த போஸ்டர்.

Aadai flp

படத்தில் காமினி என்ற கதாபாத்திரத்தில் அமலா நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின, மேலும் கைபேசி வாயிலாக நடக்கும் சைபர் க்றைம் , அதில் பாதிக்கப்படும் பெண்ணின் ரோல் என்றும் கருத்துக்குள் உலவி வருகின்றனர்.

ப்ரோமோதியஸ்

இந்நிலையில் 2012 இல் வெளியான சயன்ஸ் பிக்ஷன் ஏலியன் படத்தின் இன்ஸ்பிரஷனில் இப்படத்தின் போஸ்டர் வடிவைமைக்கப்பட்டுள்ளதாக தகவல்களை பகிர்ந்துள்ளனர் நம் நெட்டிசன்கள்.

இப்படத்தில் நூமி ராபஸ் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன் சர்ஜரி செய்துக்கொள்வார், அந்த காட்சியின் அடிப்படையில் தான் இந்த போஸ்டர் என்று சொல்லி வருகின்றனர்.

Prometheus

வேறு சிலரோ இது SAW பட சீரிஸ் போல ஆக்ஷன், கொடூர வண்மை நிறைந்திருக்கும் என்கின்றனர். இன்னும் சில விஷமிகளோ அடுத்த சன்னி லியோன் அமலா தான் பா என்கின்றனர்.

எது எப்படியோ , டீஸர் வரும்பொழுது நமக்கு ஒரு தெளிவு ஏற்படும் என்றே தோன்றுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top