Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆடை பட டீசர் வடிவேலு வெர்ஷன்.. வயிறு குலுங்க சிரித்த அதன் இயக்குனர்
Published on
அமலா பால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ராட்சசன். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆடை. இப்படத்தில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மேலும் அந்த டீசரில் அமலா பால் ஆடை இல்லாமல் அமர்ந்து இருக்கும் காட்சியை பார்த்து ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அமலாபாலின் இந்த துணிச்சலை பார்த்து ரசிகர்களும், பிரபலங்களும் பாராட்டுகின்றனர்.
ஆனால் ஆடை படத்தின் டீசரை வடிவேல் வெர்ஷன் வைத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதனை பார்த்த ஆடை பட இயக்குனர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை என்றும் மேலும் அமலாபாலிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
